பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

145

நீலக்கண்டி சந்திரம்
அருவருடி

IX முத்து வீராயி நாச்சியார்

1. முத்து வீராயி சத்திரம், இராமநாதபுரம்.

மஞ்ச்சுக்குளம்
கடம்பூர்
சிவாவயல்
கீழப்பனையூர்

2. இதம்பாடல் சத்திரம்

X முதது வயிரவநாத சேதுபதி

1. அழகப் பாலச் சத்திரம்

ஆயக்குடி சகம் 1634 (கி.பி.1712) நந்தன. ஆஷாட
கந்தனாவூர்

X குமாரமுத்து விஜய ரகுநாதசேதுபதி

இராமேஸ்வர சத்திரம் குளுவன்குடி சகம் 1659, கி.பி.1737

IV. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள்

சேதுபதிச் சீமையில் இந்து சமயத்தினருக்கு அடுத்ததாக சமண சமயமும், இஸ்லாமும், கிறித்தவமும் பரவியிருந்ததைப் பல ஏடுகளும் இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. குறிப்பாக இஸ்லாம் என்ற ஏகத்துவத்தைப் பறை சாற்றுகின்ற புதிய சமயம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றாலும் பாண்டிய நாட்டிலும் சேது நாட்டிலும் பரவலாக வளர்ந்துள்ளதை கி.பி.10,12ம் நூற்றாண்டு வரலாறு தெரிவிக்கின்றது. சேதுநாட்டில் இஸ்லாமியரது வருகை எப்பொழுது ஏற்பட்டது என்பதை அறுதியிட்டுச் சொல்லும் ஆவணம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. கி.பி.12ம் நூற்றாண்டின் இறுதியில் அரபு நாட்டிலிருந்து சுல்தான் செய்யது இபுராஹிம் என்பவர் தமது தோழர்களுடன் பாண்டிய நாட்டில் முதலில்

சே - 10