பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இலக்கியங்களில் சேரர்கள் பல பெயர்களால் வழங்கப் படுகின்றனர். அப்பெயர்களுள் வானவன், வானவரம்பன், குட்டுவன், குடக்கோ, பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை என்பன சிறப்புப் பெயர்களாகும். சேரல், சேரலர், சேரமான் என்பன பொதுப் பெயர் களாகும. வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் 11 மாண்வினை நெடுந்தேர் வானவன் 12 வானவன் மறவன்' . வசையில் வெம்போர் வானவன் 14 பெரும்படைக் குதிரை நற்போர் வானவன் க தேனிமிர் நறுந்தார் வானவன் வான வரம்பனை நீயே பெரும17 சினமிகு தானை வானவன் 18 வென்றி நல்வேல் வான வரம்பன் 19 என்று வரூஉம் தொடர்கள் சேரர்களை வானவன் என்றும் வானவரம்பன் என்றும் குறிக்கின்றன. சோழ பாண்டியர் மரபினைக் குறிப்பிடும் பண்டை நூல்கள் சேர மரபின் மூலத்தைக் குறிப்பிடாதொழிந்த தனைநோக்குமிடத்துச் சேரமரபு ஏனைய சோழ பாண்டிய மரபுகளை நோக்கப் பழமை மிகுந்தது என்பது நன்கு 11. அகம்; 159 : 15. 12. புறம்; 139 : 16. 13. அகம்; 77 : 15. 14. அகம்; 143 : 10. 15. அகம்; 309 : 10. 16. அகம்; 381 : 15. 17. புறம்; 2 : 12. 18. புறம்; 126 : 14. 19. அகம்: 45 : 16-17.