பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 நச்செள்ளையார் பாடியுள்ளார் (நான்காம்பத்து, 1:14-17). பிறிதொரு பாடலில் கடல்வளம் அப்படியே படம்பிடித்துக் காட்டப் பெறுகின்றது. இன்னிசைப் புணரி யிரங்கும் பெளவத்து நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க் கமழுந் தாழைக் கானலம் பெருந்துறை தண்கடற் படப்பை நன்னாட்டுப் பொருந. -ஆறாம்பத்து; 5:3-6. கலப்பை யுழுத கொழுவழியில் தானியக் கதிர்கள் நன்கு விளைகின்றன என்பதைனையும் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடுகின்றார். நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கின் அலங்குகதிர்த் திருமணி பெறு உம் அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே, -ஆறாம்பத்து: 8:17-19. மேலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், பல்வேறு வகைய கனந்தலை யீண்டிய மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கும். -ஆறாம்பத்து; 9:14-15. மன்னனாகப் புலவர் பெருமாட்டியால் குறிப்பிடப் பெறு கின்றான். மேலும் தொண்டி யென்னும் கடற்கரைப் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு அவன் ஆளும் சேரநாடு, * மறாஅ விளையுள் அறாஅ யாணர் -ஆறாம்பத்து; 10:8. நாடாகக் கூறப்படுகின்றது. செல்வக் கடுங்கோ வாழியாதன் நாட்டினைக் கபிலர் கவினுறப் பாடியுள்ளார். முல்லை மயங்கும் நில வருணனை பின்வருமாறு அமைந்துள்ளது: