பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வராத ஒன்றாகும். சங்ககாலத்தே தென்னாட்டு ஊர்களில் பாரதம் படிப்பதும், அது கேட்டுச் செல்வர்கள் பாரதி விருத்தியென்ற நிவந்தங்கள் வழங்குவதும் யாண்டுங் கூறப்படாமையும், இத்தகு நிகழ்ச்சிகள் இடைக்காலத்தும் பிற்காலத்து மட்டுமே நிகழ்ந்தன என அறியப்படுகின்ற மையும் மேற்கூறப்பட்ட கருத்திற்கு எதிராக உள்ளன வாகும். o, வேறு சில அறிஞர் உதியன் சேரலாதன் தன்னுடைய முன்னோருள் சிலர் பாரதப்போரில் இறந்தவராக, அவர் கட்குச் செய்த ஆண்டுவிழாவில் இப்பெருஞ்சோற்றை அளித்திருக்க வேண்டும் என்றும் கூறுவர்." இது பற்றி நெடிது ஆராய்ந்த ஆராய்ச்சி அறிஞர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் பின்வருமாறு முடிவு கூறுகின்றார்: பெருஞ்சோற்றுதியன் கொங்குநாட்டில் தான் பெற்ற வெற்றி குறித்துச் செய்த விழாவில் மேற்கொண்டு மகிழ்ந்து ஆற்றிய பெருஞ்சோற்றுநிலை என்னும் புறத் துறைச் செயல், அவனுக்கே சிறப்பால் அமைந்தமையின், அவன் பெருஞ்சோற்றுதியன் எனச் சிறப்பிக்கப் பெற்றான் என்பதும், அதனைப் பாராட்ட வந்த முடிநாகனார் ஒப்புமை பற்றி முன்னோன் ஒருவன் செயலை இவன்மேல் ஏற்றிக் கூறினார் என்பதும் தெளியப்படும். 36. திரு. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறு, ப. 70. 37. K. G. Sesha Aiyar, Cera kings of the Sangam. Period, P. 7. 38. திரு. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு, ப. 71.