பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 என மாமூலனார் குறிப்பிடுவது பாரத காலத்திய நிகழ்ச்சி என்றும் கூறுவர். *

கோதுமை உண்ணும் கூட்டத்தவரான பாண்டவ கெளரவர்கட்கு நெற்சோறுண்டு தென்னாட்டுப் பகுதிகள் ஒன்றில் வாழும் வேந்தனொருவன் சோறு கொடுத்தான் என்பது சிறிதும் ஒவ்வாதது என்றும், கெளரவர் இறந்தது குறித்துச் செய்த விழாவில் பேரெண்ணினரான மக்கட்கு இவ்வுதியன் பெருஞ்சோறளித்தான் என்று கொள்வதே பொருத்தமானது என்றும், இவ்விழா, பாரத வீரர்கட்குச் சிரார்த்தமாகவோ பாரதக் கதையை நடித்த நாடகத்தின் இறுதி விழாவாகவே இருத்தல் வேண்டும் என்பர். பேராசிரியர் பி. டி. சீனிவாச ஐயங்கார், மேலும் அவர், செயற்கரும் செயல் செய்த வீரர் வரலாறுகளை நடித்துக் காட்டும் கூத்து நிகழ்த்துவோர்க்கு மன்னர் பெருஞ் சோறளித்துப் பாராட்டும் மரபு உண்டென்றும் அவ்வாறு பாரதக் கூத்தினை நிகழ்த்திய கூத்தர்க்குப் பெருஞ்சோறு வழங்கியதனையே புறப்பாடல் குறிப்பிடுகின்றது என்றும் கூறுவர். ஆயினும் இக்கருத்தும் பொருந்துவதாக இல்லை. ஏனெனில் சாக்கைக் கூத்து அல்லது கதகளி என்னும் இவ்வகைக் கூத்து சங்ககாலத்திற்குப் பின்னர்ச் சேரநாடு கேரள நாடாகத் திரிந்த பின்றை நிலையில் ஆங்காங்குத் தோன்றிய சிற்றரசர்களுள் கொட்டாரக் கரை சிற்றரசர் ஒருவர் இக்கதகளிக் கூத்தினை முதற்கண் தோற்றுவித்தார் எனப்படுவதனால், பெருஞ்சோற்றுதியன் சேரலாதனுக்குப் பல நூறாண்டுகள் பிற்பட்டு வரலாற்றில் இடம்பெறும் கேரள சிற்றரசர்கள் காலத்துத் தோன்றிய தொரு கூத்து, பெருஞ்சோற்றுதியன் காலத்தில் நிகழ்ந்த தாகக் குறிப்பிடுவது ஆராய்ச்சி முறைக்குப் பொருந்தி

-= 34. திரு. மு. இராகவையங்கார், சேரவேந்தர் செய்யுட்கோவை, ப. IX. - # 35. History of the Tamils, PP. 492–494.