பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மாகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானை வெருவரு தோன்றல் மூன்றாம் பத்து; 2:15-16 என்ற பதிற்றுப்பத்தால் தெரியவருகின்றது. இவனுடைய வெற்றியில் யானைப்படை பெரும் பங்கு வகித்தது என்பது அமர்கோள் நேரி கந்து ஆரெயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் -- -மூன்றாம் பத்து; 9:13-14. என்பதனால் அறியப்படுகின்றது. மேலும் இவன் யானை களைக் கீழ்க்கடல் முதல் மேற்கடல் வரையில் ஆங்காங்கு நிறுத்தி அந்த யானைகளின் மூலமாகக் கீழ்க்கடல் நீரையும் மேற்கடல் நீரையும் ஒரே நாளில் கொணரச் செய்து அத் நீரைக் கொண்டு தன்னை முழுக்காட்டிக் கொண்டான் என்பது கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட் இருகடல் நீரும் ஒருபகல் ஆடி - என்று மூன்றாம் பத்தின் பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வெற்றியினால் விம்மிதம் எய்திய பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேர நாட்டைச் சேர்ந்த மேற்கு மலையின் ஒரு பகுதியாகிய அயிரைமலையின் கண் அமைந் திருந்த கொற்றவை கோயிலுக்குச் சென்று வீரர் வணங்கும் வெற்றிக் கடவுளான தெய்வத்தினைப் பரவி நின்றான். பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கெளதமனார் என்னும் அந்தணப் புலவர் பாடிய பாட்டு மூன்றாம் பத்தாகப் பதிற்றுப்பத்தில் விளங்குகின்றது. இப்பாடலுக்குப் பரிசாக, :பாடிப்பெற்ற பரிசில்: நீர் வேண்டிய கொண்மின் என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணா ராயினார்' ' என்று மூன்றாம் பத்துப் பதிகத்தின் அடிக் குறிப்பு கூறுகிறது.