பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 தண்டா ரணியத்துக் கோட்பட் டவருடையைத் தொண்டியுட் டங்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக் . கபிலையொடு குடநாட் டோரு ரீத்து வான வரம்பனெனப் பேரினிது விளக்கி + 1 . " குறிப்பிடுகிறது. மேலும் இவனுக்கு வானவரம்பன் ושוויוי என்ற பெயரும் வழங்கியது என்பது தெரிகிறது. சதகன்னர் சேரநாட்டின் வ ட க் ேக வாழ்ந்த | குடநாட்டுட் புகுந்து குறும்பு செய்யத் தலைப்பட்டனர். எனவே சேரலாதன் குடபுலம் நோக்கிப் படைநடத்திச் சென்றான். நன்னன் மரபினருட் சிலர் அப்போது கொண்கான நாட்டை ஆண்டுவந்தனர். அவர்கள் மலைபடு பொருளும், காடுபடு பொருளும், கடல்படு பொருளும் சிலவற்றைத் திறையாகத் தந்து பணிந்தேத் தினர். பின்பு சேரலாதன் நன்னன் வழியினரின் துணையோடு தன்னை எதிர்த்துவந்த சதகன்னருடன் பெரும்போர் செய்து வெற்றி பெற்றான். தோற்ற சதகன்னர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் அடிபணிந்து திறை தந்த அளவில் இவனும் சினம் தணிந்து வானவரம்பன் என்ற தன் பெயரை நிலைநாட்டி, அந்நாட்டுப் பார்ப் பனரைக் கொண்டு பெருவேள்வி ஒன்று நிகழ்வித்து, அவர்கட்குக் குடநாட்டில் ஒர் ஊரையும் தானமாக நல்கினான். வடநாட்டுச் சதகன்னருடன் குடநாட்டின் ஆதிக்கம் காரணமாகப் போர் உடற்றி வெற்றிபெற்று வஞ்சிமாநகர் போந்த சேரலாதன் கொல்லி மலைக்கும் காவிரி யாற்றிற்கும் இடைப்பகுதியிலுள்ள நாட்டில் வாழ்ந்த மழவர் என்னும் குறுநில மன்னர்கள் தெற்குப் பகுதியில் வாழ்ந்த வேளிர்கள் வாழும் நாட்டிற் புகுந்து, குறும்ட செய்து அலைக்கத் தலைப்பட்டபோது, சேரலாதன் அவர் களின் தகாத செயலைத் தகர்க்கத் தலைப்பட்டான் அவர்கள் ஆற்றல் சான்ற குதிரை வீரர்கள் ஆனமை பற்ற