பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 சேணாறு நறுநுதற் சேயிழை கணவ பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்ப. -ஏழாம் பத்து ; 5:10-12. போரில் பட்டு வீழும் பிணங்கள் பெருகி மலைபோலக் குவியப் பொருதலால் பகைவர் நாடு குடிவளம் குன்றிக் கெடுதலால், அவ்வாறு அப்பகைவர் நாட்டில் கெட்டோரு டைய குடிகளை வாழச் செய்த வெற்றி வேந்தனாக மேலும் செல்வக் கடுங்கோ வாழியாதன் கூறப்படு ன்ெறான். படுபிணம் பிறங்க நூறிப் பகைவர் கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே. -ஏழாம் பத்து; 9: 9-10.

நின்போல் நின் முன்னோரும் தெளிவா. க மாறாத கொள்கையை உடையவர்களாயிருந்தமையால் இவ்வணுச் செறிந்த நிலவுலகத்தை இனிது ஆண்டார்கள்' என்று _பிலர் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் குறிப்பிடுவர்.

நின்போல், அசைவில் கொள்கைய ராகலின் அசையாது ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம். -ஏழாம் பத்து ; 9: 11.12. செல்வக்கடுங்கோ வாழியாதன் விளையாட்டானும் பொய் கூறுதலையில்லாத வாய்மையினையும், பகைவர் தம் புறத்தே யிகழ்ந்து கூறும் சொற்களை ஏறிட்டுக் கொள்ளாத குறறம் நீங்கிய அறிவினையும், பூனார மணிந்த மார்பினையும் உடையவனாய் உள்ளான். மேலும் நாணம் நிறைந்து, பெரிய மடன் என்னும் குணம் நிலைபெற்று, கற்புநெறிக் கண்ணே தங்கின, மணம் கமழும் ஒளி பொருந்திய நெற்றியினையுடைய உயர்ந்தவட்குக் கணவனாகவும் உள்ளான். போர்க் களத்தில் வெற்றி ஈட்டிக் கொற்றவையை மகிழ்வித்தான்.