பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 பல்வகைக் கொடிகள் அசைகின்ற வலியினையுடைய பகைவரை மோதிச் சென்று பெரும்போர்களை யழித்த தாகச் சேரரின் யானைப்படை பேசப்படுகின்றது. மேலும் வினை நவில் யானை' என்ற தொடர் போர்த் தொழிலிலே நன்கு பயிற்சி பெற்றுள்ள யானைகள்' என்ற பொருளினைத் தருகின்றது. மதம் பொழிந்து மிக்க சினம் கொண்டு மதநதியின் பொருட்டு வண்டு மொய்க்குந் தலையினையுடையவாய், ம த .ெ வ றி தெளிவிப்பான் வேண்டிப் பெண்யானைகளைப் புணர்த்தப் புணர்ந்தும் தெளியாது திரிவதாக யானைப் படை கூறப்படுவதனை நோக்கச் சேரரின் யானைப் படையின் தறுகண்மையும் வெற்றிச் சிறப்பும் தாமே போதருகின்றன. பல்கொடி நுடங்கு முன்பிற் செறுகர் செல்சமங் தொலைத்த வினைகவில் யானை கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல. -ஒன்பதாம் பத்து; 2 : 3-6. படையெடுத்து முன்னேறிச் செல்லுமாறு வீரரை ஏவு கின்ற, குறுந்தடியால் புடைக்கப்படுவதால் முழங்கும் தோலாற் போர்த்தலுற்ற முரசமானது கண்ணிடத்தே குமுறி முழங்குவதுபோல, கார்காலத்து மேகமானது முழங்கினாலும் கட்டுத்தறியை வீழ்த்துக் கட்டறுத்துக் கொண்டு நெற்றியை மேலே நிமிர்த்தெழும் போர்த் தொழிலில் நன்கு பயிற்சி பெற்ற யானைப் படை என்று சேரரின் யானைப்படையினைப் பெருங்குன்றுார் கிழார் பலபடப் பாராட்டிப் பேசுகின்றார். எடுத்தே றேய கடிப்புடை யதிரும் போர்ப்புறு முரசங் கண்ணதிர்ந் தாங்குக் கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி துதலணங் தெழுதருங் தொழினவில் யானை. -ஒன்பதாம் பத்து; 4 : 1.4. சே. செ. இ.7