2
பெருங்கருத்துக்களைத் தமிழபிமானிகளெல்லாம் அறிந்து மகிழவேண்டும் என்னும் போவாவே இம்முயற்சியில் என்னைத் தூண்டியது. இவ்வுரை நடையை “வடநாட்டியாத் திரை” “பத்தினிக் கடவுளைப் பிரதிஷ்டித்தல்” என்ற இரண்டதிகாரங்களாலும் அறியலாம். “வஞ்சிமாநகரம்” “செங்குட்டுவன் காலவாராய்ச்சி” என்ற விஷயங்கள் விவாதப்பட்டவையாதலால், அவற்றைப்பற்றிய என்னபிப்பிராயங்களைச் சிறிது விரித்தெழுதல் ஆவசியகமாயிற்று. இவ்வதிகாரங்களில் விவகரிக்கப்பட்ட என் கொள்கைகளை அறிஞர் சோதித்துக்கொள்வார்களாயின், தமிழ்ச்சரித்திரத்தின் முக்கியமான பகுதியொன்று முடிவுபெற்றதாகும்.
செங்குட்டுவனைப்பற்றி ஆராய்வதற்கு இன்றியமை யாதகருவிகளெல்லாம், எவர்கள் வாயிலாக நமக்குக் கிடைத்தனவோ, அப்பெரியாரை இங்கே மறவாது வந்தித்தல் நம் கடமையாகும். மஹாமஹோபாத்யாய-ஐயரவர்கள் நம் பாஷைக்குப் புரிந்துள்ள மஹோபகாரமன்றோ, இத்தகைய ஆராய்ச்சிகட்கெல்லாம் காரணமாகும்? இவ்வாராய்ச்சிக்கு இன்றியமையாத அகநானூற்றுக்குறிப்புக்களை உதவிய ஸேது ஸம்ஸ்தான வித்வான் ஸ்ரீ-ரா. இராகவையங்கார் அவர்கட்கு என் வந்தனங்களை ஸமர்ப்பிக்கின்றேன். இவற்றுடன் யானெழுதிய இச்சிறு நூலை அபிமானித்துத் தம்மியற்கையான உதாரகுணத்தாலும் தமிழபிமானத்தாலும் இதன்