உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சேரன் - செங்குட்டுவன்

வந்தியென்னும் பார்ப்பனத்தோழியும் ஆகிய மூவருஞ் சேர்ந்து கண்ணகியைக்காணவேண்டி மதுரைக்குவரவும், அப்பத்தினியின் சீற்றத்தால் அந்நகரம் வெந்த செய்தியை யறிந்து, கண்ணகியை அடைக்கலமாகப் பெற்று அவளது துன்பம் பொறாமலுயிர்விட்ட மாதரியின் மகள் ஐயை என்னும் இடைக்குலமகளையடைந்து அவளுடன் சேர்ந்து மதுரை நீங்கி வையைக்கரைவழியே சென்று திருச்செங்குன்று என்னும் மலைமீதேறி, ஆங்குப் பிரதிஷ்டிக்கப்பெற்ற கண்ணகி கோட்டத்தையடைந்து அப்பிரதிஷ்டையைச்செய்து சிறப்பித்து நின்ற சேரன் - செங்குட்டுவனை ஆங்குக்கண்டு அவனுக்குத் தங்கள் வரலாறுகளையெல்லாம் முறையே உரைத்தனர். உரைத்தபின், அவர்களுள் தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழியும் செவிலியும் அடித்தோழியும்— கண்ணகியின் துயர்பொறாது அவள் தாயும் தம்மாமியும் உயிர் நீத்ததும், மாமனாகிய மாசாத்துவானும், தந்தை மாநாய்கனும், கோவலன் காதற்கணிகை மாதவியும், அவள் மகள் மணிமேகலையும் துறவு பூண்டதுமாகிய செய்திகளை அப்பத்தினிக்கடவுள் முன் சொல்லிப், பின் தம்முடன் வந்த ஐயையை அக்கடவுட்குக் காட்டி ‘நின்னை அடைக்கலமாகப் பெற்று அவ்வடைக் கலப்பொருளைக் காத்தோம்பமுடியாமல் உயிர் துறந்த மாதரி என்னும் இடைக்குல முதியாளின் மகளையும் பார்’ என்று கூறி அழுதரற்றிநின்றார்கள். இங்ஙனம் இவர்கள் அரற்றுகின்ற போது, பொற்சிலம்பும் மேகலாபாணமும் வளைக்கைகளும் வயிரத்தோடணிந்த காதுகளும் மற்றும் பல அணிகளும் அணிந்துகொண்டு மின்னற்கொடி போன்ற உருவமொன்று மீவிசும்பிற் றோன்றியது. அதனைக்கண்ட செங்குட்டு-