உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

85

யாடிய செய்தியை ஆங்கிருந்துவந்த மாதவர் சிலர் சொல்லக் கேட்டு, இயற்கையிலுருள்கின்ற உருளையொன்றைக் குணிலைக்கொண்டு உருட்டினாற் போலப் பத்தினியின் பொருட்டுக் கற்கொணர வேண்டுமென்றெண்ணியிருந்த அவ்வரசனுள்ளத்தை அம்மாதவர் வார்த்தை கிளரச்செய்தமையால் உடனே தன் படைகளைத் திரட்டிச் சென்று ஆரிய நாட்டரசரைப் போரில் வென்று அவர்முடித்தலையிற் பத்தினியின் படிமத்துக்குரிய இமயக்கல்லைச் சுமத்திக்கொண்டு அங்கிருந்து திரும்பி வெற்றி மகிழ்ச்சியுடன் கங்கையாற்றிற்றங்கி அப் படிமத்தைக் கங்கையாட்டித் தூய்மை செய்து தன் சினநீங்கி வஞ்சிமாநகரமடைந்து வேந்தர்பலருந் தொழத்தக்க படிமஞ் செய்வித்துப் பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டை செய்ததோடு, அக்கோயிலில் அரசரெல்லாம் தத்தம் திறைகளைக்கொண்டு வந்து வணங்கும்படியும் செய்வித்தனன்.

இஃது இங்ஙனமாக, மதுரைமாநகரில் முன்னை வினையாற் கோவலன் பொற்கொல்லனாற் கொலையுண்ண அது கேட்ட அவன் மனைவி கண்ணகி துன்பமிக்குக் கண்ணீர் பெருக்கிப் புழுதியிற்புரண்ட கூந்தலை விரித்துத் தருமதேவதையைப் பழித்துக்கொண்டு பாண்டியன் முன் சென்று வழக்காட, அவளது துக்கத்தைக்கண்டு பொறாத அவ்வரசன் தன் செங்கோல் வளைந்தமையால் உயிர் நீத்ததையும், கோவலன் கொலையுண்டது கேட்டு அவன் தந்தை துறவு பூண்டதையும், தாய் இறந்தமையையும், மாடலனென்னும் அந்தணன்மூலங் கேள்வியுற்று மிகவும் துக்கித்துக் கண்ணகியின் செவிலித் தாயும், அடித்தோழியும்,[1] சாத்தன் கோயிலில் வாழும் தே-


  1. முக்கியத்தோழி