உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சேரன் - செங்குட்டுவன்

கப்பெற்றதுமான பத்தினிக்கடவுளின் பிரதிமைக்கு அணிகலன்களெல்லாம் பூட்டியலங்கரித்துப் புஷ்பாஞ்சலி செய்து, திக்தேவதைகளையும் கடைவாயிலிலே தாபித்து, யாகவேள் வியோமங்களும் உற்சவங்களும் நிகழுமாறு கடவுண்மங்கலமாகிய பிரதிஷ்டைநிகழ்த்தச் செல்லுக” என்று சாத்திரம் வல்ல மக்களை நோக்கி, வடதிசைவணக்கிய சேரன் - செங்குட்டுவன் கற்பனை செய்தனன்.


6-வது வாழ்த்துக்காதை.
கண்ணகியின் உற்றார் அவள் கோயிற்கு வருதலும் அவருடன்
செங்குட்டுவன் பத்தினியை வாழ்த்தியதும்.


மேலே கூறியவாறு, குமரிமுதல் இமயம்வரை தன் ஆணை நடத்தி உலகாண்ட சேரலாதனுக்குச் சூரியவமிசத்துச் சோழன்மகள் பெற்ற மைந்தனும், முன்னொருகாற் கொங்கருடன் போர்புரியவிரும்பிக் கங்கையாற்றுக்கரைவரை படையெடுத்துச் சென்றவனுமாகிய சேரன் - செங்குட்டுவன் ஆரியரிடத்தேகொண்ட சினத்தோடுந்திரும்பித் தன் தலைநகரான வஞ்சியுள்வந்து தங்கியிருந்தகாலத்தே, வடநாட்டு ஆரியவர சர்பலர் அப்பக்கத்து நடந்த சுயம்வரமொன்றன் பொருட்டுக் கூடியிருந்தவிடத்தில், ‘தமிழ் நாடாளும் வேந்தர் போர் விரும்பிப் படையெடுத்துவந்து இங்குள்ள ஆரியவரசர்களை வென்று இமயவரைமேல் தங்கள் இலச்சினைகளாகிய வில் புலி மீன்களைப் பொறித்துச்சென்ற காலங்களில் எங்களைப் போலும் பெருவேந்தர்கள் இந்நாட்டில் இருந்திலர் போலும்’ என்று தம்மில் ஒத்துப்பேசித் தமிழரசரையிகழ்ந்து நகை-