பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

83

கும்படி செய்வித்துத் தான் நிகழ்த்தும் யாகமுடிந்ததும் அவரை அவரது நாட்டுக்கனுப்புவதாக அறிவித்து, அது வரை அவ்வாரியவரசர்க்கு வேண்டிய உபசாரங்களைச் செய்துவருமாறு வில்லவன்கோதை என்னும் சேனாபதிக்கு மகிழ்ச்சியுடன் கட்டளையிட்டான். அவ்வாறே, அழும்பில்வேள் என்னும் அமைச்சனோடு ஆயக்கணக்கர்களையேவி, நீர்வள மிக்க நகரங்களிலும் மற்றையூர்களிலும் சிறைப்பட்டவரையெல்லாம் வெளியேற்றிச் சிறைச்சாலைகளைத் தூய்மை செய்யவும் ஆணையிட்டனன்.

இவ்வாறு, சேரர்பெருமான் ஆணையிட்டபின், உலக முற்றுந் தொழுகின்ற பத்தினியாகத் தான் (கண்ணகி) விளங் குதலால், ‘அருந்திற லாசர் முறைசெயி னல்லது - பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது’ என முன்னோருரைத்த மொழியினுண்மையை ஆத்திமாலை சூடிய சோழனைக் கொண்டு விளக்கியும், செங்கோல் வளையுமாயின் அரசர் உயிர்வாழார் என்ற உண்மையைத் தென்னாடாளும் பாண்டியனைக்கொண்டு விளக்கியும், தாஞ்செய்த சபதம் நிறைவேறினாலல்லது தம் கொடுஞ்சினந் தணியார் அரசரென்பதை ஆரியவரசர் அறியும்படி சேரன்-செங்குட்டுவனைக்கொண்டு விளக்கியும், மதுரைமாநகரம் கேட்டையும்படி கொடிய அழலைக் கொங்கையினின்று விளைவித்தும் (இங்ஙனம் அருஞ் செயல்களைப் புரிந்து) சேரநாட்டை யடைந்து வேங்கைமர நீழலில் தங்கிய நங்கையின் பொருட்டு, அந்தணர் புரோகி தன் நிமித்திகன் சிற்பாசாரிகள் இவர்கள் சென்று அழகுபெற அமைத்த பத்தினிக்கோயிலிலுள்ளதும், இமயத்தினின்று கொணர்ந்த சிலையில் கைத்தொழிற்றிறமையால் முற்றுவிக்-