பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சேரன் - செங்குட்டுவன்

போரெல்லாரும் போம்வழியிலேபோய் வீணேகழிதலையான் பொறுக்கக்கூடாதவனாக இவைகூறினேன். ஆதலின், அறிவு முதிர்ந்த அரசே ! மோக்ஷமார்க்கத்தை அளிக்கும் யாகவேதியர்கள் காட்டுகின்ற வேதவழிப்படியே அரசர்க்கெடுக்கப்பட்ட பெரியயாகங்களை நீ செய்தல் தகும். அவ்வறங்களை -நாளைச்செய்வோம் என்று தாழ்ப்போமாயின், கேள்வியளவேயான இவ்வான்மா நீங்கிவிடின் என் செய்வது? தம் வாணாளை இவ்வளவென்று வரையறுத்துணர்ந்தோர் கடல் சூழ்ந்த இப்பேருலகில் ஓரிடத்தினும் இலர். ஆதலால், யாக பத்தினியாகிய இவ்வேண்மாளுடன் கூடி, அரசரெல்லாம் நின்னடி போற்ற அவ் வேள்வியை உடனே தொடங்கி ஊழி யளவாக உலகங்காவல் புரிந்து, நெடுந்தகாய்! நீ வாழ்வாயாக” என்று அம்மறையவன் உபதேசித்தனன்.

இவ்வாறு, மாடலன், செங்குட்டுவனது செவியே வயலாக வேதம்வல்ல தன் நாவைக்கொண்டுழுது உத்தமதர் மங்களாகிய வித்துக்களை விதைத்தமையின், அவ்விதைகள் அப்போதே விளைந்து பக்குவம் பெற்ற உணவாய்ப் பெருகவும், அவற்றை விரைந்துண்ணும் வேட்கை அவ்வரசனுக்கு உண்டாகியது. அதனால், சேரர்பெருமான், வேதவழிப் பட்ட தர்மங்களை நன்கறிந்த சிரௌதியராகிய வேள்வியாசிரியர்களுக்கு, மாடலமறையோன் கூறிய முறையே, யாகசாந்திக்குரிய விழாவைத் தொடங்கும்படி ஆஞ்ஞாபித்தனன். பின்னர்த் தன்னாற் சிறைப்படுத்தப்பட்ட ஆரியமன்னராகிய கனக விசயரைச் சிறையினின்று மீட்பித்து, பொய்கை சூழ்ந்ததும் குளிர்ச்சிதங்கிய மலர்ச்சோலைகளுடையதுமாகிய வேளாவிக்கோமந்திரம் என்னுமாளிகையில் அவர்களை வசிக்-