பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சேரன்-செங்குட்டுவன்

அந்நீர்க்காகமும் இப்போது உன் கையின் கண்ணே உள்ளது. சந்திராதித்தர் உள்ளவளவும் அந்நீரின் கடவுட்டன்மை ஒழியாது. இக்கரகத்து நீரைச் செங்குட்டுவன் முன்னேயுள்ள இவ்விளம்பெண்கள் மூவர் மீதும் தெளிப்பாயாயின், இன்னோர் முற்பிறப்பினை அறிந்தோர் ஆவர்; இதனுண்மையை நீயே சோதித்துப் பார்.” என்று கூறினாள்.

இங்ஙனம் தேவந்தி ஆவேசமுற்றுக்கூறிய வார்த்தைகளைக் கேட்டலும், செங்குட்டுவன் மிகவும் விம்மிதமுற்றுப் பக்கத்திருந்த மாடலன் முகத்தை நோக்கினான். அப்போது அவ்வந்தணன் மகிழ்ச்சியுற்றவனாகிச் செங்குட்டுவனை வாழ்த்தி—‘அரசே ! இது கேட்பாயாக; மாலதியென்னும் பார்ப்பனமாது தன்மாற்றாள் குழந்தையை எடுத்துப் பால் கொடுக்கப் பழவினைவயத்தால் அப்பால் விக்கிக் குழந்தை கையிலேயிறக்கவும், அதன் பொருட்டு ஆற்றாளாய்ப் பெருந்துன்பமடைந்து, பாசண்டச்சாத்தன் கோயில் சென்று அத்தெய்வத்தின்பால் வரங்கிடந்தாள். அவளது பெருந்துயர்க் கிரங்கி அச்சாத்தன் குழந்தையுருக்கொண்டு வந்து ‘அன்னாய்! யான் வந்தேன்; இனி உன் துயரொழிக’ என்று கூறவும், அம்மாலதியும் மாற்றாந்தாயும் அதனை வளர்க்கக் காப்பியம் என்னும்பழங்குடி பொலிவடைய வளர்ந்து, பக்குவம் வந்ததும் அப்பிள்ளை இத்தேவந்தியை மணந்து இவளோடும் எட்டியாண்டு இல்லறம் நடத்திவந்தான்.[1] இவ்வாறு நிகழுங் கால், ஒருநாள், தன் மனைவியாகிய இவட்கு அச்சாத்தன் தன் தெய்வவுருவை வெளிப்படுத்திக்காட்டித் தன் கோட்டத்-


  1. இங்ஙனமே, கண்ணகியின் பார்ப்பனத்தோழியான தேவந்தியின் வரலாற்றை, இளங்கோவடிகள் கனாத்திறமுரைத்த காதையினும் விரித்துக் கூறுவர்.