பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

சேரன்-செங்குட்டுவன்

கொண்டு, நடுநிசியில் பெருந்துயரத்தோடு சென்றனையே; இதனை நினைக்குந்தோறும் என்னெஞ்சம் வருத்தமிக்குப் புலம்புகின்றது; இத்துயரம் என்னாற் பொறுக்கக்கூடவில்லை; என் அருமை மகனே! என்பால் ஒருகால் வாராயோ” (என்று கதறினள்).

(மூன்றாமவள்) “இளையோனே! நீ என்மனையிற் றங்கியிருந்த காலத்தே வையையாற்றில் நீராடச் சென்றிருந்த நான் திரும்பிவந்தபோது ஊராரால், ஐயோ! நீ கொலையுண்டதைக் கேட்டேன். கேட்டதற்கேற்ப, மனையில் வந்து நான் பார்த்தபோது நின்னைக் கண்டிலேன். எந்தாய் ! என்னையறியாது எங்குச் சென்றனையோ, தெரிந்திலனே!” (என்றழுதாள்).

இவ்வாறாக அச்சிறுமிகள் மூவரும் முதியோர் பேசும் பேச்சால் செங்குட்டுவன் திருமுன்பே அக் கோட்டத்தில் அரற்றியழவும், போந்தைமாலையணிந்த அவ் வேந்தர் பெருமான் வியப்புற்று மாடலன் முகத்தை மறுமுறையும் நோக்க, அரசனது குறிப்பறிந்து அவனையாசீர்வதித்து அம்மறைய வன் கூறுவான் :— “அரசே! ஒருகாலத்தில், மதயானை கைக் கொண்டதனால் உயிர்போகும் நிலைமையிலிருந்த அந்தணனொருவனது பெருந்துயர் ஒழியும்படி அவனை அவ்யானையின் கையிலிருந்து தப்புவித்துத் தானே அதன் கையிற் புகுந்து, கொம்புகளின் வழியாக அதன் பிடர்த்தலையிலேறி வித்யாதரன் போல விளங்கித் தன்னருஞ்செயலைக் காட்டிய கோவலனது[1] அன்புடைமனைவி மேல், இம் மூவரும் பெருங்-


  1. இவனது இவ்வரிய செயலை அடைக்கலக்காதை (42- 53) லும் இளங்கோவடிகள் கூறினர்.