பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

93

காதல் வைத்தவராதலால், விண்ணாடு சென்ற அவரோடு தரமுஞ் செல்லத்தக்க நல்லறத்தை இன்னோர் செய்யாது போயினர். அதனால், இவர்கள் கண்ணகியின்பாற் பேரன்புடையராய், அரட்டன்செட்டி மனைவிவயிற்றில் இரட்டைகளாகச் சேர்ந்து வஞ்சிமூதூரிற் பிறந்தனர் ; ஆயர் முதுமகளாகிய மாதரி முற்பிறப்பிற் கண்ணகி மேல்வைத்த காதன் மிகுதியாலும், திருமால் பொருட்டுக் குரவைக்கூத்தாடிய விசேடத்தாலும் சேஷசாயியாகிய அப்பெருமானது திருவடி பிடிப்பான் குலத்திற் சிறுமகளாகத் தோன்றினள். இதனால் நல்லறஞ்செய்தவர் பொன்னுலகடைதலும், ஒன்றிற்காதல்வைத் தோர் பூமியிற் பற்றுள்ள விடத்தே பிறத்தலும், அறம்பாவங்களின் பயன் உடனே விளைதலும், பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதியனவன்றித் தொன்மைப்பட்டன என்பது நன்கு விளங்கும். இடபாரூடனாகிய சிவபிரான் திருவருளாலுதித்துப் புகழ்மிகுந்த மன்னவனாக நீ விளங்குதலால், அரசே! முற்பிறவியிற் செய்த தவப்பயன்களையும் பெரியோர் தரிசனங்களையும் கையகத்துப்பொருள்போற் கண்டு மகிழப்பெற்றாய்; ஊழியூழியாக இவ்வுலகங்காத்து வேந்தே! நீ வாழ்வாயாக” என்று கூறித், தம்முன் அழுது புலம்பிய அவ்விளம் பெண்கள் மூவரும் முற்பிறப்பில் முறையே கண்ணகியின் தாயும், கோவலன் தாயும், ஆய்ச்சியாகிய மாதரியுமாயிருந்த செய்திகளைச் செங்குட்டுவனுக்குத் தெளிய மாடலன் விளக்கினான்.

இவற்றைக் கேட்டுப் பெரிதும் வியப்புற்ற சேரர்பெருமான், பாண்டி நாட்டுத் தலைநகரான கூடன் மாநகரம் எரியுண்ணும்படி தன்முலைமுகத்தைத் திருகியெறிந்த பத்தினியாகிய