பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

சேரன் செங்குட்டுவன்


பாதுகைகளை வணங்கி வாங்கிச் சிரசில் தரித்துக் கொண்டு தன் அரசுவாவின் மேல் ஆரோகணித்தனனென்றும், அப்போது, ஆடகமாடமென்னுங் கோயிலிற் பள்ளிகொண்ட திருமால் பிரசாதத்துடன் சிலர் வந்து இவனை வாழ்த்தி நிற்க, தன் முடியிற் சிவபிரான் திருவடிநிலைகளைத் தரித்திருந்தமையின், அத்திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத்தில் தாங்கிக் கொண்டு சென்றனனென்றும் இளங்கோவடிகள் குறிக்கின்றார். இவற்றை,

“நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங்கொண்டு”

(சிலப். 26: 62-67)

“கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன்
குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென
ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத்
தாங்கினனாகி”-

(சிலப். 26: 60-67)

என்னும் அடிகளால் அறியலாம். இவற்றால், சிவபிரான்பால் இவ் வரசனுக்கிருந்த பத்திமிகுதி விளங்கத் தக்கது. ஆயினும், பிற்காலத்தரசர் சிலர் போல மதாந்தரங்களில் வெறுப்புக் காட்டுதலின்றித் தன் காலத்து வழங்கிய எல்லாச் சமயங்களிலும் அன்பு வைத்து ஆதரித்து வந்தவன் செங்குட்டுவனென்றே தெரிகின்றது. இவனாட்சிக் காலத்திலே, வஞ்சி