பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


சரித்திரச்சுருக்கங்களைப் பெரும்பான்மை தழுவியே, “செங்குட்டுவன்காலத்து இரண்டு சரித நிகழ்ச்சிகள்” என்ற அதிகாரம் வரையப்பட்டது. இப்பதிப்பினிறுதியிற் சேர்த்திருக்கும் அநுபந்தமுதலியவைகளை நூலுடன் சேர்த்துப் படித்துக்கொள்ளுதல் முக்கியமாகும். இவற்றுள், பொருட் குறிப்பிலே சில அரும்பதங்கட்கு அருத்தங்களும் காட்டப் பட்டிருக்கின்றன.

இந்நூற்பதிப்பைச் சிறப்பித்தற்குரியவற்றை யெல்லாம் அன்புடன் செய்து தவிய மதுரைத் தமிழ்ச்சங்கத்தார்க்கு என்றும் நன்றியறிதற் கடப்பாடுடையேன். இதுபோலும் சரித்திரகிரந்தங்களில் அபிப்பிராய பேதங்கள் நிகழக்கூடியது இயல்பாதலால், அறிஞர் என் குற்றங்குறைகளைப் பொறுத் தருள்வாராக.


மதுரை,
1-2-15.

இங்ஙனம்
மு. இராகவையங்கார்,
“லெக்ஸிகன் கமிட்டி” - தமிழ்ப்பண்டிதர்.