உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சேரன் - செங்குட்டுவன்

என்பவனாதல் வேண்டும். கடைச்சங்கமிருந்த பாண்டியருள் இவனையே இறுதியில்வைத்து நூல்கள் கூறுதல் காண்க.[1] இச் செழியன், கானப்பேர்[2] என்ற ஊரைப்பிடித்து அதன் தலைவனான வேங்கைமார்பனைப் போரில் வென்றவன். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய அகநானூறு தொகுத்தவனும் இவ்வரசனேயாவன். செங்குட்டுவன் அம்மானாகிய பெருநற் கிள்ளியும், சேரமான் மாவெண்கோவும், இவ்வுக்கிரப்பெருவழுதியும் மிக்கநட்பினராயிருந்த செய்தி ஒளவையார் பாடலொன்றால்[3] அறியப்படுகின்றது. இவற்றால், நம் சேரர் பெருமான் காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியரை அடியில்வருமாறு கொள்ளலாம்.

ஆரியப்படைந்த நெடுஞ்செழியன்

வெற்றிவேற் செழியன் என்ற நன்மாறன்

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதி.
———————
[சேரர் கிளையினர்.]

செங்குட்டுவனுடைய மாற்றாந்தாய் மக்களையும் அவன் ஞாதியரான இரும்பொறைகளையும் ‘சோவமிசத்தோர்’ என்னும் பகுதியும் விரித்துக்கூறினேம். இவருள், மாற்றாந்-


  1. இறையனார் களவியல் உரைப்பாயிரம்.
  2. இஃது, இப்போது பாண்டி நாட்டுன் காளையார்கோயில் என வழங்கும் தலமாகும்.
  3. புறம். 867.