உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமகாலத்தரசர்.

107


தாய்ச் சகோதரரான நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், ஞாதியராகிய செல்வக்கடுங்கோவும் பெருஞ் சோல் என்பவனும், செங்குட்டுவன் காலத்தவராகத் தெரிகின் றனர். மேலே கூறிப்போந்த முறையே, பண்டை நூல்களிற் கண்ட செய்திகள் பலவற்றுக்கும் மிகப் பொருந்துவதென்

பது, அறிஞர் நுணுகி அறியத்தக்கது.*[1]


  1. * காலஞ்சென்ற ஸ்ரீ. கனகசபைப்பிள்ளையவர்கள் தம் 1800- வருஷத்துக்கு முற்பட்ட தமிழர்' (The Tamils 1800-years ago) என்னும் அரிய நூலில், செங்குட்டுவன் மரபை முற்றும் வேறுபடக் குறித்திருப்பதோடு, எனைச் சோழர் வமிசத்தையும் சிறிது மாற்றியெழு தியிருக்கின்றனர். அவர்கள் கருத்துப்படி, செங்குட்டுவன் தந்தை - செல்வக்கடுங்கோ வாழியாதனும், தாய்-கரிகாலன் மகளுமாவர், ஆனால், பதிற்றுப்பத்தின் 5-ம் பதிகத்தில் "குடவர் கோமான் நெடுஞ் சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி மகளீன்ற மைந்தன் எனச் செங் குட்டுவன் கூறப்படுகின்றான். இதனால், இவன்றந்தை நெடுஞ்சேர லாதனென்பதும், தாய் மணக்கிள்ளியின் மகளென்பதும் விளக்க மாகும். இனிப் பிள்ளையவர்கள், மாந்தரஞ்சேரலிரும்பொறையைச் செங்குட்டுவன் மகனாகக் கருதினர். செங்குட்டுவன் மகன் குட்டுவஞ் சேரலென்பது பதிற்றுப்பத்தின் 5-ம் பதிகத்தால் நன்கறியப்படும். மாந்தரஞ்சேரல், சேரர்கிளையினராய்த் தொண்டியாண்ட இரும்பொ றைமரபினனாவன். இம்மாந்தரன் மகனாகப் பெருஞ்சேரலிரும்பொ றையைப் பிள்ளையவர்கள் குறித்திருப்பதும் மாறாகும். இப் பெருஞ் சேரல், செல்வக்கடுங்கோ வாழியாதன் மகனாவன். இஃது அவனைப் பற்றிய 8-ம் பத்துப் பதிகத்துவரும் பொய்யில் செல்வக்கடுங்கோவுக்கு வேளாவிக்கோமான் பதுமன்தேவியீன்ற மகன் என்னுந் தொடரால் விளக்கமாம். ஆகவே, இந்நூலின் முதலிற்குறித்த முறைப்படி சோர் மரபின்ரைக்கொள்ளுதலே பெரிதும் பொருத்தமென்பது ஆராய்ந்தறி யத்தக்கது. இனிச் சோழர் மரபினரை முன்குறித்தபடி இருபகுதி