பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபெரும் புலவர்கள்.

109


என்ற பகுதியினும் விரிவாக வருதலால், இங்குக் கூறப்பட் டில. இவர்களன்றித் தமிழ்நாட்டில் செங்குட்டுவன் காலத்து விளங்கிய சிற்றரசரும் பலராவர். புறநானூறு அகநானூறு முதலிய சங்கச்செய்யுள்களை ஆராயுமிடத்து, அவற்றிற் குறிக்கப்பட்ட சிற்றரசரில் அநேகர் இவன் காலத்தவராக அல்லது இவன்காலத்தை ஒட்டியிருந்தவராகவே புலப்படும். அவரையெல்லாம் ஈண்டுக்காட்டின் விரியும். இனிச் செங் குட்டுவனுக்குப் பகையரசராய் இருந்தவரைப்பற்றி இவ னது போர்ச்செய்தி கூறப்பட்டவிடத்தும் பிறவிடங்களிலும் கூறியுள்ளோம்.


9-ம் அதி :-

செங்குட்டுவனைப் பாடிய

இரு பெரும் புலவர்கள் .

சேரன் செங்குட்டுவன் காலத்தே, தமிழ்நாட்டிற் புலவர் பெருமக்களாக விளங்கியவர், பலர்; இவரெல்லாம் தமிழ்ப் பேரரசர்களாலும் சிற்றரசர்களாலும் பெரிதும் அபிமானித்து ஆதரிக்கப்பட்டுவந்தனர். எட்டுத்தொகை நூல்களிற் காணப் பட்ட புலவர் பெருமக்களிற் பலர், செங்குட்டுவன்காலத்தும் அவனையொட்டியும் ஒரு நூற்றாண்டுக்குள் விளங்கியிருந்தவ ராகவே, அன்னோர் பாடிய அரசர் முதலியவரின் தொடர்பு கள்கொண்டு அறியப்படுகின்றனர். இங்ஙனம் இச்சேரனை அடுத்திருந்த புலவர் வரலாறுகளையெல்லாம் விரிப்பிற்பெரு கும்; ஆயினும், செங்குட்டுவனால் நேரில் அபிமானிக்கப் பட்ட புலவரிருவரைமட்டும் இங்கே குறிப்பிடல் தகும். அவ ராவார்:- பரணரும் சாத்தனாரும்.