110
சேரன் செங்குட்டுவன்
[பரணர்.]
இவருட் பாணரென்பவர், கடைச்சங்கமிருந்த புலவர் பெருமக்களுள் ஒருவர். இவரைப்போல அக்காலத்தே புகழ் பெற்றிருந்தவர், கபிலர் ஒருவரேயெனலாம். அந்தணர்குல திலகராகிய இப்பரணர், செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகத்தாற்பாடி, அவனது வீரங்கொடை முதலியவ ற்றை விளக்கியிருக்கின்றார். இவர் பாடல்களைக் கேட்ட சேரர் பெருமான் மகிழ்வுற்று உம்பற்காடு என்னும் சேரநாட்டுப் பகுதியின் அரசிறைவருவாயையும், தன் மகன் குட்டுவஞ் சேரலையும் பரணர்க்குப் பரிசாகக் கொடுத்தான் என்று, அப் பத்தின் இறுதி வாக்கியங் கூறுகின்றது. தன் மகனைப் பரி சளித்தான் என்பதற்கு, பரணரிடம் அவனை மாணாக்கனாக ஒப்பித்த செய்தியைக் குறிப்பதாகக் கொள்ளுதலே பொருந் தும். இப்பாணர் தம் பாடல்களிலே, செங்குட்டுவன் கட விடையிருந்த தன் பகைவர்மேற் படையெடுத்து மரக்கலங் களைச் செலுத்திய பேராற்றலையே மிகுதியாகப் புகழ்கின்ற னர். செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதனாலும் இப்புல வர் அபிமானிக்கப்பட்டவரென்பது, அச்சேரலாதன் சோழ னுடன் புரிந்த பெரும்போரில் இறந்து கிடந்தபோது, இவர் உருகிப்பாடிய பாடலொன்றால்[1] உணரப்படுகின்றது. மற் றும், இவராற் பாடப்பெற்ற தமிழரசர், உருவப்பஃறேர் இளஞ் சேட் சென்னியும் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும், வையாவிக் கோப்பெரும் பேகனும்[2] அதிகமானஞ்சியும் வேறு
சிலருமாவர். ஒளவையாராலும் அருமையாகப் புகழ்ந்து