பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபெரும் புலவர்கள்.

111


கூறப்பட்டவர் இப்புலவர் பெருமானெனின் வேறு மிகுத்துச் சொல்வதென்னை?*[1] எட்டுத்தொகை நூல்களிலே, இவர் பாடி யனவாக 82- செய்யுட்கள் காணப்படுகின்றன. இப்பாடல்கள் ளால் அறியப்படும் விசேடங்களையெல்லாம், மஹாமஹோ பாத்யாய - ஐயரவர்கள் பதிற்றுப்பத்துப்பதிப்பின் முகவுரை யில் நன்கு விளக்கியிருத்தலால், இங்கு அவற்றை எடுத்தெ ழுதுவது மிகையென விடுத்தோம்.


(சாத்தனார்.)

இனிச் சாத்தனார் என்பவரும், கடைச்சங்கப் புலவருள் ஒருவரே; இவர் மதுரையில் நெல்லுப்புல்லு முதலிய கூல வியாபாரஞ்[2] செய்துவந்தமையால், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் எனப் பெயர் பெற்றனர். சங்கத்தில் அரங்கேற்றற் பொருட்டுப் பிறர் பாடிவரும் நூல்களிற் குற்றங்காணுந்தோ றும், அவற்றுக்கு மனம் பொறாது தம் விதியை நொந்து தலை யிற் குத்திக்கொண்டு வந்தவர் இவரென்றும், அதுபற்றிச் சீத்தலைச் சாத்தனார் என வழங்கப்பெற்றார் என்றும் கூறுவர். இவரது தலைக்குத்துத் திருவள்ளுவரது முப்பாலைக் கேட்ட போது முற்றும் நீங்கியதென்பது -

சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய்
மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் - காந்தும்
மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற்
றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு"


  1. * புறம் - 99.
  2. * கூலம் என்பன - நெல்லுப் புல்லு வரகு தினை சாமை இறுங்கு தோரை இராகி என்பன.