உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

சேரன் செங்குட்டுவன்


என்னும் மருத்துவன் - தாமோதரனார் வாக்கால்[1] அறியப்படு கின்றது. இச் சாத்தனார் பௌத்தமதச் சார்புடையவரென் பது, மணிமேகலையில், அம் மதவிஷயங்களை உணர்ச்சியுட னும் உருக்கத்துடனும் மிகவழகாக இவர் பாடுதலினின்றும், ஏனைய மதங்களை அங்ஙனம் கூறாமையினின்றும் உய்த்தறிய லாம். முற்காலத்து வழங்கிய சமய நூல்களிலும் தருக்கமுத லியவற்றினும் மிகுந்த ஆராய்ச்சியுடையார் இவரென்பதும், வட நூற்பயிற்சி பெரிதுடையவரென்பதும் மணிமேகலையால் தெளிவாகின்றன. கோவலன் கொலையையும், கண்ணகியின் சீற்றத்தால் விளைந்த மதுரைக்கேட்டையும், கோவலன் மகள் மணிமேகலை துறவையும் இப்புலவர் நேரில் அறிந்தவர். செங் குட்டுவன் தன் சகோதரருடன் பெரியாற்றங்கரையில் தங்கி யிருந்தபோது, இப் புலவர் பெருமானும் அவனுடன் சென் றிருந்தார். அப்போது மலைவாணர்பலர் வந்து, தங்கள் மலை யில் கண்ணகி சுவர்க்கம் புக்க செய்தியைச் செங்குட்டுவனுக் குத் தெரிவிக்க, இச் சாத்தனார், தாம் மதுரையில் நேரில் லறிந்த அவள் வரலாறுகளை அரசனுக்கு விரித்துரைத்தனர். இவர் தெரிவித்த செய்திகளைக் கொண்டே, இளங்கோவடி கள், கண்ணகியின் சரித்திரத்தைச் சிலப்பதிகாரமென்னுஞ் சிறந்த காப்பியமாகப் பாடுவாராயினர். இவ்வடிகள் சிலப் பதிகாரத்தைப் பாடி முடிப்பதற்கு முன்பே, சாத்தனார் கோ வலன் மகள் மணிமேகலையின் துறவைப்பாடி முடித்திருந் தனரென்பது, 'மணிமேகலைமே லுரைப்பொருண் முற்றிய சிலப்பதிகாரமுற்றும்' என்ற இளங்கோவடிகள்கூற்றே அறி

விக்கின்றது. கண்ணகி மணிமேகலையிருவர் சரிதங்களையும்


  1. * திருவள்ளுவமாலை. 11.