பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சிமாநகரம்.

123

சிரியர், “ஆடகமாடம் - திருவனந்தபுரம்; இரவிபுரம் என்பாருமுளர்” (பக். 68) என்றெழுதினார். ஆனால், செங்குட்டுவன், ஒரேயிரவில் சித்தஞ்செய்து, வடநாட்டிற்குப் பிரயாணித்த அவசர தருணத்தில், ஆடகமாடத்துத் திருமாலின் கோயிற்பிரசாதத்துடன் சிலர் வந்து அவனைக்கண்டனர் என்று அடிகள் கூறுவதை[1] நோக்குமிடத்து, அக்கோயில், வஞ்சியாகிய கருவூர்க்குப் பக்கத்திருந்ததாகுமே யல்லது, 300-மைலுக்கப்பாலுள்ள திருவனந்தபுரமாகாதென்பது திண்ணம்; ஆதலால், மேற்கூறிய அரங்கநாதப்பெருமாள் சந்நிதியே பழைய ஆடகமாடமாகக் கொள்ளுதல் பொருந்துமெனலாம்.[2]

செங்குட்டுவன் சிவபிரான்பாற் பக்திமிகுதியுடையனென்பதை முன்னமே விளக்கினோம்.[3] இளங்கோவடிகள்


  1. இந்நூல். பக். 59.
  2. கருவூர்-அரங்கநாதர் சந்நிதியை யாம் நேரிற் சென்று தரிசிக்க நேர்ந்தபோது, அக்கோயில் சிறியதாயினும் பழமையே காணப்பட்டது; கர்ப்பக்கிரகத்துள்ளே அரவணையிற் பள்ளிகொண்டருளும் பெருமாள் சாந்தாகார முடையவரென்று விசாரணையில் தெரிந்தோம். ஆனால், கர்ப்பக்கிரகத்தின் மேற்கு வெளிப்பிராகாரத்தை யாம் அடைந்தபோது, ஒரு சிறுபந்தருள், சேஷசாயியாகத் திருமாலினுருவம் வகுக்கப்பட்ட பெரிய சிலையொன்று அற்புதமாக ஆங்குக் காணப்பட்டது. அம்மூர்த்தியின் வரலாற்றை விசாரித்ததில், மடைப்பள்ளியைத் திருப்பணிக்காகப் பிரித்தபோது, பூமியின்கீழ் அவ்வழகிய சிலை அகப்பட்டுச் சிலமாதங்களே ஆயினவென்று தெரியவந்தது. இவற்றை நோக்குமிடத்து அவ்வரவணைக்கிடந்த மூர்த்தியே, செங்குட்டுவன் காலத்து “ஆடகமாடத் தரவணைக் கிடந்தோ”னாக வேண்டுமென்றும், ஏதோ ஒரு காலவிசேடத்தால் அம்மூர்த்தி பூமியில் மறைந்து, அதற்குப் பிரதியாக சாந்தாகாரமூர்த்தி அக்கோயிலுள் எழுந்தருளப்பண்ணப்பட்ட தென்றும் கருதப்படுகின்றன.
  3. இந்நூல், பக். 97.