பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சிமாநகரம்.

131

சாஸனங்களிலேனும்*[1] வஞ்சியின் பழஞ்செய்தி சிறிதுங் குறிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இக்கருவூரின் ஸ்தானத் தில் மலைநாட்டுக் கொடுங்கோளூர் சேரராஜதானியாகப் பின் னூல்களிற் கூறப்படுதல் காணலாம் ; சேரர்குலச் கோவீற் றிருந்து முறைபுரியுங் குலக்கோமூதூர் கொடுங்கோளூர் என்றார் சேக்கிழாரும்.[2] இங்ஙனம் சேரர்தலைநகரமானது பிற்காலத்து முற்றும் மறக்கப்பட்டதற்கும் அதற்குப் பிரதி யாக வேறு தலைநகரம் மலைநாட்டில் உண்டானதற்கும் தக்க காரணங்களும் உள்ளன. கருவூர், சோணாடு பாண்டி நாடு களின் எல்லையில் அமைந்தமையால்,[3] சேரருடன் விவாதம் நேரிட்டபோதெல்லாம் தமிழ் வேந்தர்க்குள் போர் நிகழ்வ தற்கு அஃது உரிய களமாயிற்று. இச்செய்தி புறநானூறு முதலிய சங்கச் செய்யுள்களால் நன்கறியப்படும். பிற்காலத் திற் சோழரது ஆதிக்கம் பெருகியபோது, கருவூர் சோணாட் டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான செய்தி சாஸனங்களா

லும்[4] நூல்களாலும் தெரிகின்றது; அநபாயன் சீர்மரபின்


  1. * இப்பசுபதீசுவரர் ஆலயத்தில், வீரராஜேந்திரன் I , இராஜேந் திரன் I, குலோத்துங்கன் III , வீரசோழன் என்ற சோழவரசர் சாஸ னங்களாகக் கண்டவற்றை, சாஸன பரிசோதகர் வெளிப்படுத்தியிருக் கின்றனர். (South Indian Inscriptions. Vol. III. No. 20-26).
  2. * சேரமான் பெருமாணாயனார் புராணம். 1.
  3. கருவூர்க்குக் கீழ்பால் 8 - மைலில், காவிரிக்கரையிலுள்ள மதுக் கரையைச் சேரசோழபாண்டியநாடுகளின் எல்லையாக இக்காலத்தாரும் கூறுவர். 'சோணாட்டின் மேற்கெல்லை கருவூர் என்பர், யாப்பருங் கலக்காரிகை உரைகாரர் (ஒழிபி. 7 உரை).
  4. ஓ கி. பி. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கருவூர் சோணாட் டைச் சார்ந்ததென்பர் சாஸனபரிசோதகர் (Government Epigra- phist report. 1891)