பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

சேரன் செங்குட்டுவன்


மாநகரமாகுந் தொன்னெடுங் கருவூர்" (எரிபத்த.2.) "தங்கள் குல மரபின்முதற் றனிநகராங் கருவூரில்" (புகழ்ச்சோழ. 12) எனச்சேக்கிழாரும் இச்செய்தி கூறுதல் காண்க. ஏறக்குறைய 900- வருஷங்கட்கு முன் சோழசக்கரவர்த்திகளாகப் பிரப லம் பெற்றிருந்த இராஜராஜன் I . அவன் மகன் இராஜேந்தி ரன் I காலங்களில், இக்கருவூரைச் சூழ்ந்த வெங்காலநாட் டிற்குக் கேரளாந்தகவளநாடு என்றும், இவர்களை அடுத்த குலோத்துங்க சோழன் காலத்தில் சோழகேரளமண்டலம் என்றும் பெயர்கள் வழங்கிவந்தன என்பது*[1] கருவூர்ப் பசு பதீசுவரர் கோயிலிலுள்ள சாஸனங்களால் வெளியாகின்றது. இப்பெயர்களால், சோழராதிக்கத்துக்கு முன்பு கருவூர்ப்பிர தேசம் சேரர்க்குச் சிறந்த பூமியாகக் கருதப்பட்டிருந்தமை பெறப்படும். சோழர்க்கு முன் இம்மண்டலம் கொங்கு தேச ராஜாக்கள் ஆட்சிக்குட்பட்டிருந்ததென்றும்,[2] அவர்க் கும் முற்பட்ட சங்ககாலத்தேதான், அது சேரரது சிறந்த தேசமாகி வஞ்சி எனப்பட்ட இக்கருவூரை தலைமைநகரமா கக்கொண்டு விளங்கியதென்றும் அறியத்தக்கன. சங்ககாலத் துக்குப் பின்னர்ச் சோழராற்றற்கு அஞ்சிய சேரர், வஞ்சி யைவிட்டு நீங்கித் தங்கட்குரிய மலைநாட்டிற் கடற்கரையி லுள்ள கொடுங்கோளூரைத் தலைமை நகரமாகக் கொள்ளலா யினர். பிற்பட்ட சோராஜதானியாகத் தெரிகின்ற இவ்வூ

ரைப் பழையவஞ்சி அல்லது கருவூரென்று கொள்வதற்குச்


  1. * S. I. I. Vol. III, No. 30. 31.
  2. * கருவூர், கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகக் கூறப்படுதல் காண்க. ஆனால், சங்கநாளிலே, கொங்கு தேசம் குடகுநாடாயிருந்த மை "குடகக்கொங்கரும் ” என்னும் அடிகள் வாக்கால் அறியலாம். (சிலப். 30. 159.)