பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

137

கூறாது வியந்தனர் ஒரு புலவர். கடற் படையைக் கொண்டு இவன் ஒருகாலத்துச் செய்த வீரச்செயலையும், அதுபற்றி இவன் “கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்” என வழங்கப்பட்டதையும் இவனது “போர்ச்செயல்கள்” கூறியவிடத்தே விளக்கினோம்: இவ்வேந்தனது தரைப்படையும் அங்ஙனமே அளவாலும் ஆற்றலாலும் மேம்பட்டிருந்தது. பத்தினிக்குப் படிமச்சிலை எடுத்தற்கும், ஆரியரை வெற்றி கொள்வதற்குமாக இவன் வடக்கே சென்று வந்த முப்பத்திரண்டுமாதம்வரை இவனாட்டிற் குழப்பமொன்றும் இல்லாதிருந்ததோடு, குடிகளெல்லாம் இவனாட்சியில் மகிழ்ச்சிமிக்கவர்களாய்த் தம் அரசன் வெற்றியைத் தமக்குரிய பெருமையாகவேகொண்டு விளங்கினர் என்றுந்தெரிகிறது.[1]

செங்குட்டுவனது அரசியலில், முற்காலமுறைப்படி, அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் என்ற ஐவருமே சிறந்திருந்தவர்கள். இவர்களை அரசர்க்குரிய ஐம்பெருங்குழு என்பர் முன்னோர்.[2] இவர்களன்றிக் கரும வினைஞர், கணக்கியல் வினைஞர், தருமவினைஞர், தந்திர வினைஞர், பெருங்கணி என்ற அரசியல்வகிக்குந் தலைவரும் இருந்தனர்.[3] கருமவினைஞர் என்போர் தேசத்தின் ஆட்சியை நடத்துவோரென்றும், கணக்கியல் வினைஞர் என்போர் தேசத்தின் வரிவருவாய்களைக் கவனிக்கும் அதிகாரிகளென்றும், தருமவினைஞர் நாட்டினறங்களைப் பாதுகாப் போரென்றும், தந்திரவினைஞராவார் படைகளின் சம்பந்தமான தலைமை வகிப்போர் என்றும், பெருங்கணி அரசனது


  1. இந்நூல், 74-5-ம் பக்கம்.
  2. ௸. 58-ம் பக்கக் கீழ்க் குறிப்பு
  3. சிலப். 26, 40-1.