138
சேரன் - செங்குட்டுவன்
காரியங்கட்குரிய காலங்களையும் நிமித்தங்களையும் கணித் துரைப்போன் என்று தெரிகின்றன. இவரெல்லாம், அரச னது மந்திராலோசனைக்கு உரியவராவர். செங்குட்டுவனது தரைப்படைக்குத் தலைமை வகித்தவீரன் வில்லவன்கோதை என்பான். இவனே செங்குட்டுவனது வடயாத்திரையில் அவனுடைய சேனைகளை நடத்திச் சென்று ஆரியவரசருடன் நிகழ்ந்த பெரும்போரில் வெற்றி பெற்றவன். வில்லவன் கோதையொடு வென்று வினை முடித்த - பல்வேற்றானைப் படை என்றார், இளங்கோவடிகளும்*[1]. இவனைப்போலவே, தேசவருவாயின் தலைமையைவகித்த அமைச்சன், அழும்பில் வேள்[2] என்பவன்; இவன் அழும்பில் எனப்படும் வளம் பெருத்த நாட்டின் தலைவன்; இவனுக்கு வானவிறல் வேள்' என்ற பெயரும் வழங்கியது.[3] இவ்வமைச்சன் செங்குட்டு வற்குச் சமயோசிதமாகச் சூழ்ச்சியுரைக்க வல்லனாயிருந் தான்.[4] இனி, நம் வேந்தனது தூதுவருள்ளே தலைமை வகித்தவன் சஞ்சயன் என்றும், இவனுக்கு அடுத்தபடியி லிருந்தவன் நீலனென்றும்[5] தெரிகின்றன. இவர்கள்
முடங்கிய தூதுவரெல்லாம் தம்மாசனிடமிருந்து வேற்றரசரிடம் சமாசாரங்களைத் தெரிவித்து வருதற்குரியர்; அன்றியும்
- ↑ * சிலப். 26. 251 - 2.
- ↑ + சிலப். 28. 204-5. tஈவான விறல்வேள், அழும்பி லன்ன நாடிழந் தனரும்" என்பது மதுரைக்காஞ்சி (344-5). சேரன் படைத்தலைவனாகிய நன்னனுக்கும் இப்பெயரே வழங்கப்பட்டுளது. இதனால், சேரரது அரசியலில் தலைமை வகித்த ஒரு சாரார்க்கு இப் பெயர் வழங்கி வந்ததாகக் கருதப்படுகிறது. (யாம் எழுதிய வேளிர் வாலாறு; 67-ம் பக்கம் பார்க்க.)
- ↑ த சிலப். 25. 173-7.
- ↑ 1 ஷ . 26. 137.
- ↑ ஷை. 28. 109.