பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்.

141


யாதல் காணலாம். இங்ஙனமாயின், சாஸன பரிசோதகரால் வட்டெழுத்து எனப்படும் பழைய தமிழெழுத்தைச் செங்குட் டுவன் காலத்துக் கண்ணெழுத்தாகக் கொள்ளல் பொருந்தும் போலும். பழைய தமிழெழுத்தாய்ச் சாஸனங்களில் மட்டும் காணப்படும் வட்டெழுத்து நம் நாட்டில் வழக்கு வீழ்ந்து பல நூற்றாண்டுகளாயினும், மலைநாட்டுள்ள சோனகர்க்குள் கோலெழுத்து என்று வழங்கப்பட்டு இன்றும் அது வழங்குகின்ற தென்பர்.*[1] கண்போன்றிருத்தலாற் கண்ணெழுத்து என்றும், வட்டமாகவிருத்தலின் வட்டெழுத்து என்றும், சித்தி ரித்தெழுதப்படுதலாற் கோலெழுத்து என்றும் ஒன்றே பல பெயர் பெற்றதென்க. இனி, ஸ்ரீமாந் - கோபிநாதராயரவர்கள், இதுவரைகண்ட சாஸனங்களுள்ளே பழைமை வாய்ந்த தமிழ்ச்சாஸனமொன்றைச் செந்தமிழ்ப்பத்திரிகையில் வெளி யிட்டிருக்கின்றனர்.[2] செஞ்சிக்கடுத்த திருநாதர் குன்றுப் பாறையில் வெட்டப்பட்ட அச்சாஸனம், ஜைந ஆசிரியரொ ருவர் ஐம்பத்தேழுநாள் அநசநவிரதம் (உண்ணாநோன்பு) பூண்டு உயிர் துறந்த செய்தியைக் குறிப்பது. அடுத்த பக்கத் துக்கண்ட அத்தமிழ்ச்சாஸனம் வட்டெழுத்துமுறையினின் றும் சிறிது மாறியுள்ளதென்பது இராயரவர்கள் கொள்கை, ஆயினும் அதன் தமிழெழுத்துக்கள், ஏறக்குறையச் செங்குட்டுவன் காலத்து வழங்கியவை என்பது அவர்களெ ழுதிய குறிப்பால் அறியப்படுதலால், அத் தமிழெழுத்தின் மாதிரிகையை நம்மவர் அறிந்துகொள்ளுமாறு அச்சாஸனத்

தையே தருகின்றேம்.


  1. * Dr. Gundert's Malayalam Grammar (art).
  2. * தொகுதி-5, பக்-410-1.