பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணாதிசயங்கள்.

161


பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு
ஆடகப் பெருநிறை ஐயைந் திரட்டி
தோடார் போந்தை வேலோன் தன்னிறை
மாடல மறையோன் கொள்கென் றீத்தாங்கு”

(சிலப். 27. 173-76)


எனக் கூறுகின்றார். இதனுள்ளே , இவனது நிறையளவா கக் குறிக்கப்பட்ட "ஆடகப் பெருநிறை ஐயைந்திரட்டில் என் பதற்கு, அரும்பதவுரையாளர் ஐம்பது துலாம் பாரம் பொன்" என்று கூறுவர். ஒரு துலாம் என்பது 100 - பல மாகும் ;[1]* ஆகவே, 50 - துலாத்துக்கு 5000-பலமாகின்றன. ஒரு பலமென்பது 3- ரூபா எடையாகவும், 6- ரூபா எடை யாகவும் இக்காலத்தார் பலபடியாக வழங்குதலால், பழைய காலத்துப் பலவளவு இதுவென்று துணியக்கூடவில்லை. எனி னும், குறைந்த முறையிலே, தற்காலத்து 3 ரூபா எடைப் பிரமாணத்தையே கொண்டு பார்ப்போமானால், 40-ரூபா நிறைகொண்ட பௌண்டுக் கணக்கில் 375 - பவுண்டு செங் குட்டுவனது நிறையாகவேண்டும். இது சிறிது மிகுதிபோ லத் தோற்றுமாயினும், பழைய காலத்து மக்களுள்ளே பெரு வீரனாக விளங்கிய வேந்தர் பெருந்தகை யொருவனுக்கு மேற் குறித்த நிறையளவு அதிகமாகாதென்றே தெளியலாம். ஒரு கால், மூன்று ரூபா நிறைக்கும் குறைந்ததாகப் பழையபல வளவு இருந்திருத்தல் கூடுமாயின், அஃது இக்காலவியல்

புக்கும் ஒத்ததாகலாம். எங்ஙனமேனும், தற்காலத்தும் 300


  1. * பிங்கலந்தை . சூத்திரம் - 2254 - 55.