பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

சேரன் செங்குட்டுவன்


பவுண்டு நிறையளவுள்ள மக்களை நாம் காணக்கூடியதாகவே இருத்தலால், இளங்கோவடிகள் தம் தமையனுக்குக் குறித்த 50 - துலாமளவு , புனைந்துரையன்றிப் பொருத்த முடையதாகுமென்பதில் ஐயமில்லை. இது நிற்க, சேரன். செங்குட்டுவனது 50-ம் வயதில் நாற்பதும் வந்தது நரைத் தூதும் வந்தது என்ற முன்னோர் மொழிப்படி, அவன் நரை முதிர்ந்தவனாகவே இருந்தனன்; திருஞெமி ரகலத்துச் செங்கோல் வேந்தே - நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை*[1] என மாடலன் இவனை நோக்கிக் கூறுதலால் இதனையறிக. சோவரசர் பலருள்ளே, செங்குட்டுவனும் இவன்றந்தை சேர லாதனும் அதிக காலம் ஆட்சிபுரிந்தவர்கள் என்பது, பதிற்

றுப்பத்தின் பதிகங்களாற் புலப்படுகின்றது.


  1. * சிலப். 28. 157-8.