பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13-ம் அதி:-

செங்குட்டுவன் காலவாராய்ச்சி.

இனி, செங்குட்டுவன் காலத்தை ஆராய்வோம். இவ் வேந்தன் வாழ்ந்த காலத்தை ஆராய்வதினின்று, தமிழ்ச் சரிதத்தின் முக்கியமான பகுதியொன்றையே நாம் தெரிதல் கூடும். எவ்வாறெனின், இச்சேரனைப் பாடிய பரணரும் சாத்தனாரும் அவர்கள் காலத்துப் புலவர்கள் பலரும் கடைச் சங்கத்தவரென்பதும், அப்புலவர்களாற் பாடப்பட்ட பேரரசருஞ் சிற்றரசரும் அக்காலத்தையே சூழ்ந்திருந்தவரென்பதும் சங்க நூல்களால் நன்கறியப்படுகின்றமையால், இவ் வாராய்ச்சியிலிருந்து அப்புலவர் அரசர்களது காலநிலையும் தெளிவாகக்கூடுமன்றோ ? இதுபற்றியே, தமிழறிஞர் சிலர் இவ்வேந்தன் காலத்தையாராய முற்படுவாராயினர். இன் னோருள், காலஞ்சென்ற ஸ்ரீ. கனகசபைப்பிள்ளையவர்களை இங்கே குறிப்பிடல் தகும். கடைச்சங்க காலம் பற்றி இவர் கள் எழுதிப்போந்த காரணங்களுள் முக்கியமானவை இரண் டெனலாம்.

முதற்காரணம் - செங்குட்டுவன் காலத்தவனாக இளங் கோவடிகள் கூறிய இலங்கை வேந்தன் - கயவாகுவின் காலத் தைக்கொண்டு அச்சேரன் காலத்தை அளந்ததாம்; அஃதா வது, இலங்கைச் சரித்திரத்துடிகண்ட கஜபாகு என்ற பெயர் ருடையார் இருவருள், முன்னவன் கி.பி. இரண்டா நூற் றாண்டிலும், பின்னவன் 12-ம் நூற்றாண்டிலும் ஆண்டவர் எனப்படுகின்றனர். இவருள் இண்டாமவன், மிகப் பிந்திய