பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

சேரன் செங்குட்டுவன்


காலத்தவனாதலின், கி.பி. 113 - 135 வரை ஆட்சிபுரிந்தவ னாகத்தெரியும் முதற் கயவாகுவே நம் சேரன் காலத்தவனா தல்வேண்டும் என்பதாம்.

இரண்டாங் காரணம் - செங்குட்டுவனுக்கு நட்பரசராக இளங்கோவடிகள் குறித்த நூற்றுவர்கன்னரைப் பற்றியது. நூற்றுவர்கன்னர் என்போர், மகதநாடாண்ட சாதகர்ணி என்ற ஆந்திரவரசரைக் குறிக்கும் தமிழ்வழக்கென்றும், மச் ச புராணத்தின்படி, அப்பெயர் தரித்த அரசனது காலம், கி.பி. 77- 133 வரையாகுமென்றுங் கூறப்படுகின்றன. இங்ஙனம், நூற்றுவர் கன்னர் என்ற அரசன் காலமும், மேற்குறித்த கயவாகுவின்காலமும் மிக நெருங்கியிருத்தலால், அவ்விருவ ருடன் நட்புப்பூண்டிருந்த செங்குட்டுவனுக்கு ஷை 2-ஆம் நூற்றாண்டையே கொள்ளுதல் பொருந்தும் என்பது.[1]*


இவ்வாறு, செங்குட்டுவன் காலம், 2-ம் நூற்றாண்டாக எழுதப்பட்ட கொள்கையானது, நம்மவருட் பெரும்பாலா ருடைய நன்கு மதிப்பும் சம்மதமும் பெற்றிருத்தலை நாம் அறிவோம். ஆயினும், சமீபத்தில் நிகழ்ந்த எமதாராய்ச்சி யில், அம் 'முடிந்த' கொள்கையை விரோதித்து நிற்கும் முக்கியமான விஷயங்கள் சில எதிர்ப்படலாயின. இவற்றி னின்று, நம் சேரன், மேற்குறித்த காலத்துக்கும் இரண்டு

மூன்று நூற்றாண்டுவரை பிற்பட்டவனாகத் தோற்றுகின்றது.


  1. *ரீமாந்-S. கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரவர்கள் -4, கயவாகு வின் காலம் 179 - 201 வரை ஆகுமென்றும், நூற்றுவர் கன்னர் எனப்பட்ட சாதகர்ணி என்பான் 172-202 வரை ஆட்சிபுரிந்த யஜ்ஞஸ்ரீசாதகர்ணி ஆதல் வேண்டுமென்றும் சில மாற்றங்கள் செய்து எழுதுவர் ; இவர்கள் கருத்துப்படி, செங்குட்டுவன் 2 அல்லது 3-ம் நூற்றாண்டினனாவன் (செந்தமிழ். 4-ம் தொகுதி, பக். 525-27).