பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலவாராய்ச்சி

165


இதற்குரிய காரணங்களை இங்கு விவரிப்பதால், சங்க காலத் தைப்பற்றி ஐயுறாது சமாதானம் பெற்றிருக்கும் உள்ளங்கட்கு இடையூறாகுமோ என்றஞ்சுகின்றோம். எனினும், அபிப்பிரா யங்களை மறைப்பதனாற் சரித்திரவுண்மை வெளிப்படுதல் தடைப்படுமாதலின், அறிஞர் ஆராய்ந்து ஏற்றபெற்றிகொள் ளுமாறு, அவற்றை ஈண்டு வெளியிடுவோம்.

கடைச்சங்க காலத்தில் விளங்கிய புலவருள்ளே, கபிலர், பரணர், நக்கீரர், மாமூலர், சாத்தனார் முதலியோர் சிறந்தவர்களென்பது, யாவரும் நன்கறிவர். இவருள், மாமூலனார் - சோழன் கரிகாலன், சேரலாதன், கள்வர்கோ மான் புல்லி முதலிய அரசர்காலத்தவர் என்பதும், தமிழ் நாட்டின் பல பாகங்களிலும் வடநாடுகளிலும் இவர் சஞ் சரித்து வந்தவரென்பதும், அகநானூற்றிற்கண்ட இவர் பாடல்களால் அறியப்படுகின்றன. இப்புலவர், செங்குட்டு வனாற் போரில் வெல்லப்பட்ட பழையன் மாறனுக்கும் மோரி யாருக்கும் நிகழ்ந்த போரொன்றையும் குறிப்பிடுதலால்*[1] அச்செங்குட்டுவன் காலத்தவராகவும் தெளியப்படுகின்றார். இனி, இம்மாமூலனார் வாக்காகவுள்ள , அகநானூற்றின் 265-ம் பாட்டிற்கண்ட அரிய செய்தியொன்று ஈண்டு ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளத்தக்கது : அஃதாவது-

"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் தழீஇக் கங்கை
நீர் முதற் கரந்த நீதியங் கொல்லோ .”

என்பது. இவ்வடிகளிலே, நந்தருடைய புராதன ராஜஸ்தல

மாகிய பாடலீபுரத்துள் கங்காநதி பிரவேசித்து அதன்


  1. * அகநானூறு . . 251.