பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலவாராய்ச்சி

167


போது காணப்படவில்லை. ஆயினும், கி.பி. 7-ம் நூற்றாண் டில் சீனதேசத்தினின்று வந்து நம் நாடெங்கும் சஞ்சரித்த பிரசித்த யாத்திரிகரான ஹ்யூந்- த்ஸாங் (Hiuen - Tsung) என்பவர் இந்நகரத்தை நேரில் பார்த்து வருதற்பொருட்டுச் சென்றபோது, அது தன் பூர்வ நிலையை முற்றுமிழந்து, கங் கைக்கரையில் 200, 300-வீடுகளுடையதாய் 1000-ஜனங்கள் வசித்துவந்த ஒரு சிறு கிராமமாக மாறிவிட்ட நிலையை அவர் குறித்திருக்கின்றார். இதனால், கி.பி. 400-ல் தன் பழைய பெருமையோடு விளங்கிய பாடலீபுரம், ஹ்யூந்- த்ஸாங் வந்த காலமான கி. பி. 650-க்கு முன் கங்கையால் அழிவுற்றிருத் தல் வேண்டுமென்பது ஐயமின்றிப் பெறப்படும். சந்திரகுப்தன் காலத்தவரான மெகஸ்தனிஸ் என்ற யவன தூதரால் குறிக்கப்பட்டதும், பாடலியைச் சூழ்ந்திருந்ததுமான பெரிய மாக்கோட்டை சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட விவரத்தை எழுதுமிடத்தில், ஸ்ரீ. ரோமேச்சந்திர தத்தர் தம் நூலிற் காட்டியுள்ள கீழ்க்குறிப்பு ஈண்டுக் கவனிக்கத்தக்கது.


"சீன தேச யாத்திரிகரான பாஹியான் வந்து பார்த்தபோது, கி. பி. 5-ம் நூற்றாண்டில் அம்மரச்சுவர்கள் அழியாதிருந்தன. பாஹியான் எழுதுவதாவது - ' அந்நகரத்துள்ள அரண்மனைகள்*[1] பூதகணங்கள் கொணர்ந்து சேர்த்த கற்களால் நிருபிக்கப்பட்ட சுவர்களுடை யனவாகும். அக்கட்டிடத்துச் சாளரங்களை அலங்கரித்து நிற்கும் சித்திரங்களும் பிரதிமைகளும், இக்காலத்தவராற் செய்யமுடியாத அவ்வளவு வேலைத்திறம் வாய்ந்தவை. அவைகள், முன்பிருந்தவாறே ஒன்றும்


--


  1. * இப்பழைய அரண்மனை, - பாங்கிபூர் (Bankipore) பாட்னா (Patna) நகரங்கட்கு இடைப்பட்ட ரயில்வேயின் தென்பாரிசத்து, குமாராஹார் (Kumarahar) கிராமத்தின் வீடுவயல்களின் கீழ்ப் புதை அண்டிருந்ததாகத் தெரிகிறது. (V. A. Smiths Early History of India. p. 120. note.) -