பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

சேரன் செங்குட்டுவன்


உள்ளன.'- என்பது. பாடலீபுரத்தின் அழிவானது, பாஹியான் கா லத்துக்குப்பின் மிகவும் அடுத்து நிகழ்ந்ததாம். ஏனெனின், 7-ம் நூற்றாண்டில் ஹ்யூந்-த்ஸாங் என்ற மற்றொரு சீனயாத்திரிகர் ஆங்கு வந்து பார்த்தபோது, அந்நகரத்தின் அழிவுபாட்டையும், 200, 300- வீடுகளுடைய ஒரு சிறு கிராமத்தையுந் தவிர, வேறொன்றையும் அவர்அங்குப் பார்க்கவில்லை - எனக் காண்க.*[1]

மேற்கூறியவற்றால், பாடலீபுரம் கி.பி. 5, 7-ஆம் நூற்றாண்டுகட்கிடையில் அழிவுற்ற செய்தி தெளிவாகின்றது. பழைய பாடலிக்குச் சிறிது தூரத்தோடிய கங்கையானது இப்போது அதன் பக்கத்துச் செல்வதால், அம்மஹாந்தியின் திடும் பிரவேசத்தாலுண்டான நிலைமாற்றமே அவ்விராஜஸ் தலத்தின் பேரழிவுக்குக் காரணமாகியதெனக் கருதலாம். ஆகவே, செங்குட்டுவன் காலத்தவரான மாமூலனார், சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை, நீர்முதற் கரந்த நிதியம் என்று பாடியிருப்பது, முற்கூறிய பாடலியழிவுச் செய்தி யையே குறிப்பதென்பதில் தடையென்னை? ஹ்யூந்-த்ஸாங் வந்து பார்த்தபோது பாடலீபுரம் ஒரு குக்கிராமமாக மாறி யதென்று அவர் எழுதினராயினும், அவ்வழிவு தமக்கு முன் இன்ன காலத்து நிகழ்ந்ததென்று அவருங் குறித்திலர்; தமது காலத்தையடுத்து அது நிகழ்ந்திருந்ததாயின் அச் செய்தியையும் அவர் கூறாமற்போகார் ; அங்ஙனமின்மை யால், அவர் வருகைக்கு இரண்டொரு நூற்றாண்டுகளுக்கு முன்பே அவ்வழிவு நேர்ந்திருத்தல் வேண்டும்; அஃதாவது, யூ - த்ஸாங்குக்கு முன்வந்தவரான பாஹியான் காலத்தை

யொட்டி (கி.பி. 5-ம் நூற்றாண்டில்) அது நிகழ்ந்த


  1. * Civilization in Ancient India. p. Part I. p. 217.