பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலவாராய்ச்சி.

177


பட்ட தக்ஷிணதேசத்து ராஜாக்களுள்ளே கேரளனை மட்டும் இவன் சாஸனங்குறித்து மற்றச்சோழபாண்டியரைக் குறிக் காமையால், அத்தமிழ்வேந்தர் இவனுடன் எதிர்த்து நின்று அடங்காதிருந்தவராதல் வேண்டும். பாண்டியன் சேனாவீரனான பழையன் மாறன் அங்ஙனமே அடங்கவில்லை யென்பது மாமூலனார்வாக்கே காட்டுதல் காணலாம். சமுத்திரகுப்தன் காலத்துச் சோழபாண்டியர் முறையே கரிகாலனும், நெடுஞ் செழியன் அல்லது மாறன்வழுதி போன்றவருமாதல் வேண் டும். இவர்களுட் கரிகாலன் வச்சிரம் அவந்திமகதநாட்டாசரை வென்றவன் எனப்படுதலும்[1]* நெடுஞ்செழியன் "ஆரி யப்படைதந்தவன் என்றும்[2] மாறன்வழுதி வடபுல மன்னர்வாட அடல்குறித்த "வனென்றும்[3] கூறப்பட்டிருத் தலும் இச்சமுத்திரகுப்தன் போன்ற வடவரசர் விடுத்த சேனையை அக்காலத்துத் தமிழ்வேந்தர் அஞ்சாதெதிர்த்து நின்ற செய்தியைக் குறிப்பிக்கும்.


இச்சமுத்திரகுப்தன் கி.பி. 375- வரை ஆட்சி புரிந்த வன் எனப்படுகின்றான். எனவே, இவனால் வெல்லப்பட்ட மாந்தான், முற்கூறியபடி செங்குட்டுவனுக்குச் சிறிது முற் பட்டவனாகவும், பழையன் மாறன் அக்குட்டுவனுக்குச் சம் காலத்தவனாகவும் தெரிதலின், நம் சரித்திர நாயகனான சேரன் காலமும் 4-ம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 5-ம் நூற் றாண்டின் முற்பகுதியாகக் கொள்ளல் பொருத்தமாம். ஆயின்,

சமுத்திரகுப்தன் மகனான சந்திரகுப்த - விக்கிரமாதித்தன்


  1. * சிலப்பதிகாரம். 5-ம் காதை. 99 - 104.
  2. * ஷை, மதுரைக்காண்டத்திறுதிக் கட்டுரை.
  3. + புறம். 52. 12