பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

சேரன் செங்குட்டுவன்


(கி. பி. 375-413) அல்லது அவன் மகனான குமாரகுப்தன் (413 - 455) காலங்களும், நம் சேரர் பெருமான் காலமும் ஒன்றாகச் சொல்லலாம்.

இனித் தமிழ்ச் செய்திகளைக்கொண்டு, செங்குட்டுவன் வாழ்ந்த சங்ககாலத்தை நோக்குவோம். நக்கீரனாரைப் பற் றித் தமிழ்மக்களெல்லாம் நன்கறிவரன்றோ ? இவர் கடைச் சங்கத்தை அலங்கரித்த பெரும்புலவரெனக் கருதப்படுத லின், அச்சங்கத்தைச் சார்ந்தவராய்ச் செங்குட்டுவனைப் பாடிய பரணர் சாத்தனார் முதலியோருக்கு, ஏறக்குறைய சமகாலத்தவரென்பது சொல்லாதே அமையும். [1]* இந்நக்கீரர் இறையனார் களவியலுக்குப் பொருள் கண்டவராகக் கூறப் படுகின்றார். இப்போது வெளிவந்துள்ள அக்களவியலுரை இந்நக்கீரர் செய்ததாகவே வழக்குள் தேனும், அவரால் நே ராக எழுதப்பட்டதன்றி அவரதாசிரியபரம்பரையின் கீழ் வழங்கியதென்பது அந்நூலின் உரைப்பாயிரத்தை ஆராய்ச்சி செய்யும்போது உணரப்படுகின்றது. அவ்வுரைப்பாயிரத் தில், நக்கீரனார் முதலாக, மாணாக்கர் பதின்மர் தலைமுறைகள் கூறப்பட்டு இங்ஙனம் வருகின்றதுரை' என்று முடிந்திருத் தலால், நக்கீரனார் முதல் வாய்ப்பாடமாகச் சொல்லப்பட்டு வந்த அவ்வுரை, அவர்க்குப் பத்தாம் தலைமுறைக்காலத்தே

தான் நூலாக எழுதப்பட்டதென்பது விளக்கமாமன்றோ?[2]


  1. நம் சேரனுடன் பொருத பழையன் மாறன், கிள்ளிவளவன் என்ற சோழனை (இந் நூல்-பக்.102) வெற்றிகொண்ட செய்தியை நக்கீரனார் பாடுதல் (அகம் - 316) அப்புலவரும் நம் சேரனும் சமகாலத்த வரென்பதைக் காட்டுகின்றது.
  2. இவ்வுரை வரலாற்றைப்பற்றி "இளம்பூரணவடிகள்” என்ற ஆராய்ச்சியிலும் விரித்தெழுதியுள்ளேம். (செந்தமிழ். தொகுதி - 4, பகுதி. 7.)