பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலவாராய்ச்சி.

179


இக்களவியலுரை எழுத்துருவடைந்தது எக்காலத்து? என்பது இனி ஆராயற்பாலது. அவ்வுரையெழுதியோராற் காட்டப்பட்ட உதாரணச் செய்யுள்களில் அரிகேசரி, பராங்குகன், நெடுமாறன் முதலிய பெயர்கள் தரித்த பாண்டியனொருவன், சங்கமங்கை நெல்வேலி முதலிய இடங்களில் போர் வென்றவனென்று விசேடமாகப் புகழப்படுகின்றான். சமீ பத்துக்கண்ட சின்னமனூர்வேள்விகுடித்*[1] தாமிரசாஸனங் களிற் குறிக்கப்பட்ட பாண்டிய வம்சாவளியால், அப்போர் களிலே வெற்றிபெற்ற அரிகேசரி - பராங்குசன் என்பான்[2] கி.பி. 770-ல் விளங்கிய[3] ஜடிலவர்மன் - பராந்தகனுடைய தந் தையென்பது தெளிவாகின்றது. இதனால் தந்தை அரிகே சரியின் காலம் கி.பி. 770-க்கு முற்பட்டதென்பது பெறப் படும். படவே, களவியலுரை இயற்றப்பட்ட காலம் அவ் எட்டா நூற்றாண்டுக்கும் பிற்பட்டதாகுமென்பது விளங்கு கின்றது. அன்றி, உரையெழுதியவர், தாம் காட்டும் உதார ணச்செய்யுளிற் கண்ட பாண்டியன தர காலத்தவரே (கி. பி. 760) என்றாலும், அவரிலிருந்து 10- தலைமுறை முற்பட்ட நக்கீரனார்க்கு ஐந்தா நூற்றாண்டே உரியகாலமாதல் வேண் டும் எவ்வாறெனின், பரம்பரை வமிசங்களைத் தலைமுறை

ஒன்றுக்கு 30 வருஷங்கொண்டளக்கும் முறைப்படி,[4] 1 அக்


  1. * Epigraphical Annual Report. 1907-8. p. 62. 68.
  2. + இவன், கி.பி. 76-ல் இருந்த நந்திபோதபல்லவமல்லனுடன் ஷை இடங்களில் போர் நிகழ்த்தியவனென்பர்.
  3. + இவன் காலம் கி.பி. 770 என்பது யானை மலைச்சாஸனத்தால் அரிந்தது. (செந்தமி. தொகுதி - 4. பூக்-336.)
  4. 1 பதிற்றுப்பத்திற் கண்ட சேரவரசர் எண்மருக்கு, அவரவர் பதிகங்கூறும் காலத்தைக்கொண்டு நோக்குமிடத்தும், தலைமுறையொ ன்றுக்கு 30-வருஷக்கொள்ளுதல், பழைய தமிழ்மக்களுக்கு அதிகமா காதென்பது விளங்குகின்றது.