பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

சேரன் செங்குட்டுவன்


களவியலுரைக்காலமாகிய8-ம் நூற்றாண்டைவைத்து அதனிலிருந்து 10 - தலைமுறை முற்பட்ட நக்கீரர்காலத்தைக் காணுமிடத்து, அப்புலவர் பெருமான் உத்தேசம் 5-ம் நூற் றாண்டிலிருந்தவராதல் பெறப்படும். அஃதாவது, - (கி. பி. 770 - 10x30) 470-ல் வாழ்ந்த வர் என்பதாம். ஆகவே, அந்நக்கீரனார் காலத்தை ஏறக்குறைய ஒட்டியிருந்தவனாகத் தெரியும் செங்குட்டுவன் முதலியோர்க்கும் அந்நூற்றாண்டின் முற்பகுதியைக் கொள்ளத்தடையில்லை என்க. இவ்வரை யறை, களவியலுரையெழுதியவர் தாங்காட்டிய பாண்டிய னுக்குச் சம காலத்தவராயிற் பொருந்துமல்லது, பிற்பட்டவ ராயின் நக்கீரர்காலம் இன்னும் குறைவுபடுமென உணர்க. எங்ஙனமாயினும், 5-ம் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத் தை நக்கீரனார்க்குக் கூறுதல் ஏற்புடைத்தன் றென்பதை இச்செய்தி விளக்குமென்பது ஒருதலையாகும்.*[1]

சேரன் செங்குட்டுவனது வடயாத்திரையில் அவனுக் குப்பேருதவிபுரிந்தவர் கன்னர் என்போர் ; இளங்கோவடி கள் இவரைக் கூறுமிடங்களிலெல்லாம் கன்னரெனப்பன்மை யாக்குவதோடு, நூற்றுவர்கன்னர் ஆரியவரசர் ஐயிருபதின் மர் எனத் தொகைப்படுத்துவதாலும், அவர் ஒரு கூட்டத்த வராயிருந்தனர் என்பது விளங்குகின்றது. இவரையே அவ் வடிகள் மாளுவவேந்தர் என்றும் குறிப்பிடுதல் முன்னரே விளக்கப்பட்டது.[2] இவற்றால், மாளுவதேசத்தை (Malwa)

பலபகுதிகளாகப் பிரித்தாண்ட அரசர் கூட்டத்தவராகவே


  1. * ஸ்ரீமாந்-து . அ. கோபிநாதராயரவர்களும் இவ்வபிப்பிரா யமே கொள்வர். (செந்தமிழ். தொகுதி - 6. பக் - 58-59)
  2. * இந்நூல். பக்-108.