காலவாராய்ச்சி.
181
இவரைக்கொள்ளுதல் பொருந்துமென்று தோற்றுகின்றது. சமுத்திரகுப்தனால் மாளுவதேசம் வெல்லப்பட்ட காலத்தில் அந்நாட்டின் பெரும்பாகம் ஒருவரன்றிப் பல கூட்டத்தாரால் ஆளப்பட்டுவந்ததென்றும், அவன் மகன் சந்திரகுப்தனால் அத்தேசம் குப்த ஏகாதிபத்யத்துள் ஒன்றாக்கப்பட்டதென் றும் சரித்திர நூலோர் *[1] கூறுவர். சேரன் செங்குட்டுவன் 5-ம் நூற்றாண்டினனாயின், அவனட்பரசராய் மாளுவநாட் டை ஆண்டுவந்த கன்னரென்ற கூட்டத்தார் மேற்கூறிய குப்தர் காலத்துச் சிற்றரசர்களே என்று கருதல் தகும்.
இனி, தமிழறிஞர் சிலர், இளங்கோவடிகள் குறித்த நூற்றுவர் கன்னர் என்பது ஆந்திரவரசர் பட்டப்பெயரான சாதகர்ணி ' என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பென்றும், அதனால் நூற்றுவர்கன்னர் என்பது செங்குட்டுவன் கா லத்து ஆந்திரவரசனான ஒருவனையே குறிக்கவேண்டுமென் றுங் கருதுவர். இளங்கோவடிகள் வாக்கை நோக்குமிடத்து, கன்னன், கன்னி என ஒருமையாற் கூறாது கன்னர்[2] எனப் பன்மையாகவும், கங்கைக்கரையிலிருந்த செங்குட்டுவன் அக் கன்னரை அவருடைய வளந்தங்கிய நாட்டிற்கனுப்பியதைக் குறிக்கும்போது, ஆரிய வரசர் ஐயிரு பதின்மரைச் - சீரியல் நாட்டுச் செல்கென் றேவி" என்றும்[3] மாளுவ வேந்தர் " என்றும் ஒரு கூட்டத்தாராகவும் பாடப்பட்டிருத்தலால் நூற்றுவர் கன்னர்" என்ற தொடர் அரசனொருவனைக் குறிப்
பதாகப் புலப்படவில்லை. ஒருதால், சாதகர்ணி என்பதன்