பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14-ம் அதி:—

முடிவுரை.

மேலே விரிவாக எழுதிப்போந்த பல அதிகாரங்களாலும், சேரன் - செங்குட்டுவனது பெருவாழ்வின் வரலாறு ஒருவாறு வெளியாகும். இச்சோர் பெருமானது பெருமையை நோக்குமிடத்து, இவனை நாம் "தென்னாட்டு அசோகன்" என்றே சொல்லல் தகும். அறிவாற்றல்களால் மட்டுமன்றி, சரித்திர உண்மையாலும் எவ்வாறு அசோக சக்கரவர்த்தி வடநாட்டில் மதிக்கப்பெற்றவனோ, அவ்வாறே , தென்னாட்டின் பழைமைக் குற்றவருள் செங்குட்டுவனே சிறந்தோனாவன். சங்கச் செய்யுள்களில் எத்தனையோ அரசர் செய்திகள் கூறப்பட்டிருப்பினும், இச்சேரன் போன்ற அத்துணைப் பெருமையுடையவராக அன்னோர் அறியப்படாததோடு, இவ்வளவாக அவர் வரலாறுகளை ஆராய்ச்சி செய்வதற்கும் இடமில்லை. இங்ஙனம், புலவர் பாடும் புகழுடையோனாய், வீரம் நியாயம் தியாக முதலியவற்றால் விளங்கி நின்ற இச்சேரனுக்குப்பின், இவன் மகன் குட்டுவஞ்சேரலே பட்டமெய்தியவனாதல் வேண்டும். ஆனால், செங்குட்டுவன் பரம்பரையோர், அவனுக்குப்பின் தம் பழைய பெருமையினின்று சுருங்கிவிட்டவர்ராகவே தோற்றுகின்றனர். இவர் வலிசுருங்கியகாலத்தே சோழபாண்டியரும், அந்நிய அரசராகிய பல்லவர் கங்கர் போன்றவரும் தென்னாட்டில் மாறி மாறி ஆதிக்கம் பெறுவாராயினர். இதனால், சேரவாசர் தம் புராதன ராஜஸ்தலமான வஞ்சிமாநகரை நெகிழவிட்டு, இயற்கையாண் பெற்ற மலைநாட்டுள்ள கொடுங்கோளூரை (Cranganore), தங்கள் தலைநகராகக் கொள்ளலாயினர். அவ்விராஜதானியில் இருந்து