பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரவமிசத்தோர்

11

ரைப் போரிற்பிடித்து, அக்கால வழக்கின்படி, நெய்யை அவர் தலையிற்பெய்து கையைப் பின்கட்டாகக் கட்டி, அவரிடத்தினின்று விலையுயர்ந்த அணிகளையும் வயிரங்களையும் தண்டமாகப்பெற்று, அவற்றைத் தன் தலைநகராகிய வஞ்சியிலுள்ளார்க்கு உதவியது; கடலிடையே தீவொன்றில் வசித்த தன் பகைவர்மேற் கப்பற்படையுடன் சென்று, அவரது காவன் மரமான கடம்பை வெட்டியெறிந்து, அப்பகைவரைப் போர்தொலைத்தது முதலியனவாம்.[1] இவற்றுள், இறுதியிற் கண்ட சேரலாதன்பகைவர், கடம்பைத் தம் குலமரமாகக் கொண்டு, மைசூர்தேசத்தின் மேல்பாலை ஆண்ட கதம்பவேக்தராகக் கருதப்படுகின்றனர்.[2] இக்கடம்பெறிந்த அரிய செயலைச் செங்குட்டுவன் காலத்தவரான மாமூலனார் என்ற புரும்,

“வலம்படு முரசிற் சேரலாதன்
ழுந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமயத்து

முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார்

பணிதிறை தந்த பாடுசால் நன்கலம் [3]

எனக் கூறுதல் காண்க. இச்சேரலாதனை 2-ம் பத்தாற்பாடிய அந்தணரான குமட்டூர்க்கண்ணனார், இவனால் உம்பற்காட்டில் ஐந்நூறூர் பிரமதாயமும்[4] தென்னாட்டு வருவாயிற் பாகமும் பெற்றனர். இவ்வேந்தன் 58- வருஷம் வீற்றிருந்தான்.[5] இனிச் சேரலாதர் இருவராகக்கொண்டு, இமயவரம்பனும்


  1. பதிற்றுப்பத்து. 2-ம் பதிகம்
  2. Mysore and Coorg from the Inscriptions. 21.
  3. அகநானூறு. 127.
  4. அந்தணர்க்கு இறையிலியாக விடப்படுவது.
  5. பதிற்றுப்பத்தின் 2-ம் பதிகத்து வாக்கியம்