சேரவமிசத்தோர். செங்குட்டுவன் சகோதரர்
செங்குட்டுவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன், வேற் பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்னுஞ் சோழனுடன் பெரும்போர் புரிந்தபோது, அவ்விருவருமே போர்க்களத் தில் ஒருங்கிறந்தனர் என்பது, அவர்களிறந்துகிடந்த நிலையை நேரிற்கண்டு கழாத்தலையாரும் பாணரும் உருகிப் பாடிய பாடல்களால் தெரியவருகின்றது. [1] இந் நெடுஞ்சேரலாதன் 58 - ஆண்டு வீற்றிருந்தவன். இவன் பேராற்றலுடன் விளங்கியதற்கேற்ப, இவன் மகன் செங்குட்டுவனும் பெருவீரனாய் அவனது சிங்காதனத்துக்கு உரியவனாயினான். நெடுஞ்சேரலாதன் சிவபிரான் திருவருளை நோற்றுச் செங்குட்டுவனைப் பெற்றவனென்று உய்த்துணரப்படுகின்றது.[2] இவன் அரசாட்சி பெற்றதில் விசேடச் செய்தியொன்றுஞ் சொல்லப்பட்டடுள்ளது. நெடுஞ்சேரலாதனுக்குச் செங்குட்டுவனுடன் இளங்கோ ஒருவனும் பிறந்திருந்தனர். இவ்விளங்கோ, பேரறிவும் உத்தமகுணங்களும் வாய்ந்தவன். ஒருநாள் பேத்தாணியில் மன்னர்கள் புடைசூழ, நெடுஞ்சேரலாதன் தன் மக்களிருவருடனும் வீற்றிருந்தபோது, நிகழ்வது கூறவல்ல நிமித்திகனொருவன் அம் மண்டபத்தை அடைந்து, அரசனையும், அவன் மக்களையும் அடிமுதன் முடிவரைநோக்கி -"வேந்தர் வேந்தே! இனி நீ விண்ணுலகு செல்லுங்காலம் நெருங்கியது ; நீ தாங்கியுள்ள செங்கோலை நின் மக்களிருவருள் இளையோனே வகித்தற்குரியனாவன்" என்று
பலருமறியக் கூறினான். இது கேட்ட மூத்தவனான செங்