பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சேரன் - செங்குட்டுவன்

குட்டுவன் மனமுளைந்து நிற்க, அஃதறிந்த இளங்கோ , அந்நிமித்திகன் முறைமைகெடச் சொன்னதற்காக அவனை வெகுண்டு தந்தமையன் கொண்ட மனக்கவலை நீங்கும்படி அவ்வத்தாணிக்கண்ணே அரசாளுரிமையை முனிந்து துறவு பூண்டு, வீட்டுலகத்தை ஆளற்குரிய பெருவேந்தராய் விளங்கினர் - என்பதாம். கருவிலே திருவுடையராயிருந்தும் இளமையில் தாம் துறவு பூணும்படி நேர்ந்ததைத் தம் அழகிய வாக்கால் இவ் விளங்கோவே கூறியிருத்தல் அறிந்து மகிழற்பாலது.செங்குட்டுவனுடன் பத்தினிக்கடவுளை வழிபட்டுத் திரும்பும்போது, தேவந்தியின் மேல் அக்கடவுள் ஆவேசித்துத் தம்மை நோக்கிக் கூறியதாக இவ்வடிகள் கூறுவதாவது:-

வேள்விச் சாலையில் வேந்தன் பெயர்ந்தபின்
யானுஞ் சென்றேன், என்னெதி ரெழுந்து
தேவந் திகைமேற் றிகழ்ந்து தோன்றி
'வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாணிழ லிருந்தோய்! நின்னை
அரசுவீற் றிருக்கும் திருப்பொறி யுண்டென்று
உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக்
கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட்டுவன்றன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயிற் படியோர் தம்முன்
அகலிடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து
அந்தமி லின்பத் தரசாள் வேந்து' என
என்றிற முரைத்த இமையோ ரிளங்கொடி'[1] என்பது.

இவ்வரலாற்றையே அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரப் பதிகவுரையிற் சிறிது விரித்துக்கூறினர். இவற்றால், செங்


  1. * சிலப்பதிகாரம், 30: 170-83.