போர்ச்செயல்கள்.
31
“மறத்துறை முடித்த வாய்வாட் டானையொடு
பொங்கிரும் பாப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய
என, கடலோட்டிய செய்தியோடு சேர்த்து ஆரியரை வெற்றி கொண்டதை இருமுறை இணைத்துக் கூறுதலால், செங்குட்டுவன், தன் தாயின் படிமத்தை நீராட்டுதற்குக் கங்காயாத்திரை செய்தபோது, இங்ஙனம் பகைவென்றவனாகவே தோற்றுகிறது. கடலிற் செய்த இவ்வருஞ்செயல்பற்றியே “சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்” [1] “கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்”[2] என இவ்வேந்தன் புகழப்படுகின்றான். இவனது கடற்படையெடுப்பில், தனக்குச் சிறந்த வேலை யேற்றிக் கலங்களைச் செலுத்தி, தன்னுள் வாழ்வார்க்கு அரணாயிருந்த கடல்வலியை அழித்தமையால், மேற்குறித்த பெயர்கள் வழங்கலாயின என்க.[3] இவன் தந்தை நெடுஞ்சேரலாதனும் இங்ஙனமே கடனடுவிலிருந்த தன் பகைவர் மேற் படையெடுத்துச் சென்று வென்ற செய்தி முன்னரே குறிக்கப்பட்டது.[4] இனி, இளங்கோவடிகள்,
“கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
என்று கூறிய செய்தி, இப்போருடன் தொடர்புடையதோ அன்றித் தனியானதோ தெரிந்திலது. இதனால், தன் காலத்-