பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சேரன்-செங்குட்டுவன்

முதற்செயல், கடலை அரணாகக்கொண்டு இடர்விளைத்த பகையரசரை, எண்ணிறந்த மரக்கலங்கள் மூலம் படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டதைக் குறிக்கின்றது.

“இனியா ருளரோ முன்னு மில்லை
வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே.” (45)

“கோடுநரல் பவ்வங் கலங்க வேலிட்
டுடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய
வெல்புகழ்க் குட்டுவன்.” (46)

“கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்

கடலொ இழந்த பனித்துறைப் பரதவ.” (48)

எனப் பதிற்றுப்பத்தினும்,

“படைநிலா விலங்குங் கடன்மரு டானை
மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பொறாது விலங்குசினஞ் சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய
தீர்மா ணெஃக நிறுத்துச்சென் றழுந்தக்

கூர்மத னழியரோ நெஞ்சே.” (212)

என அகநானூற்றினும் வரும் பரணர் வாக்குக்களால், செய்தற்கரிய கடற்போரொன்று செங்குட்டுவனால் நிகழ்த்தப் பட்டமை தெளியப்படும். இளங்கோவடிகள்,

“நெடுங்கட லோட்டி, உடன்று மேல் வந்த வாரிய மன்னரைக்

கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்.” (28; 119-21)